
‘பேட்ட’ பட ட்ரெயிலர் ஒரே நாளில் ஒரு கோடிப்பேர் பார்க்கப்பட்ட சாதனை நிகழ்ந்த நிலையில் இன்று மதியம் கொலவெறி மாஸாக ‘விஸ்வாசம்’ ட்ரெயிலர் வெளியிடப்படும் என அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில் அது பேட்டயை விட பல மடங்கு சாதனைகளைப் புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காகவே அஜீத் ரசிகர்கள் கொத்துக்கொத்தாக ரூம் போட்டு வெயிட்டிங்கில் இருப்பதாகவும் ‘பேட்ட’ படம் 24 மணி நேரத்தில் சாதித்ததை தாங்கள் 12 மணி நேரத்தில் சாதிக்க சபதம் எடுத்திருப்பதாகவும் அஜீத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ட்ரெண்டிங் படங்களின் வரிசையில் நேற்று முதலிடத்தில் இருந்த ‘பேட்ட’ மற்றும் சில இந்திப்படங்களை அடித்து நொறுக்கி முதலிடத்தை அடைந்திருக்கிறது அஜீத்தின் ‘விஸ்வாசம்’.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.