'விஸ்வாசம்' உண்மையில் 125 கோடி வசூலித்து விட்டதா? இயக்குனர் சிவாவின் பளீச் பதில்!

Published : Jan 19, 2019, 03:30 PM IST
'விஸ்வாசம்' உண்மையில் 125 கோடி வசூலித்து விட்டதா? இயக்குனர் சிவாவின் பளீச் பதில்!

சுருக்கம்

தல அஜித் நடிப்பில் தற்போது பல திரையரங்கங்களில் மாஸ் காட்டி வரும் 'விஸ்வாசம்' திரைப்படம், இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் சிவா வெளிப்படையான பதில் ஒன்றை கூறியுள்ளார்.    

தல அஜித் நடிப்பில் தற்போது பல திரையரங்கங்களில் மாஸ் காட்டி வரும் 'விஸ்வாசம்' திரைப்படம், இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் சிவா வெளிப்படையான பதில் ஒன்றை கூறியுள்ளார்.  

தல அஜித், மற்றும் நயன்தாரா நடிப்பில், வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் தற்போது விவாதிக்க கூடிய விஷயமாகவும் மாறியுள்ளது. 'விஸ்வாசம்' படத்துடன் ஒரே தினத்தில் வெளியான 'பேட்ட' படம் வெற்றி பெற்ற போதிலும், 'விஸ்வாசம்' திரைப்படத்தை விட குறைவான வசூலையே பெற்றிருப்பதாக கூறி, அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மோதிக்கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது.

இந்நிலையில் தற்போது, 'விஸ்வாசம்' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய நிறுவனம் அதிகாரபூர்வமாக, தமிழகத்தில் விஸ்வாசம் 125 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தகவல் உண்மை என்றும் பொய்யான தகவல் என்றும் நெட்டிசன்கள் விவாதம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'விஸ்வாசம்' இயக்குனர் சிவா சமீபத்தில் படத்தின் வசூல் குறித்து பேட்டி ஒன்றில் கூறியபோது, "ஒரு தொழில்நுட்ப  கலைஞர் வியாபாரத்தின்,  விபரம் பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால்  அவருடைய உருவாக்கும் சிந்தனை பாதிக்கப்படும், அதேபோல் ரசிகர்களும் வியாபாரத்தின் விபரத்திற்குள் சென்று பார்த்தல் அவர்களுடைய ரசிப்புத்தன்மை பாதிக்கப்படும். அந்த இடத்திற்கு போகக்கூடாது என்பதே எனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

மேலும், என்னை பொருத்தவரையில் ஒரு கதையை எழுதுகிறோம். அந்த கதைக்காக உண்மையான கடினமான உழைப்பை தருகிறோம். அது வெற்றி பெரும்போது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதோடு அடுத்த கதைக்கு போய்விடுவேன். இதுதான் ஒரு கிரியேட்டராக என்னை சரியாக கொண்டு செல்லும் என்று நான் நினைக்கின்றேன். 

ரசிகர்களும் ஒரு திரைப்படத்தை பார்த்து அதை கொண்டாடினால் அதுதான் மிகப்பெரிய ரசிப்புத்தன்மை. எந்த படம் எவ்வளவு வசூல் செய்தது என்ற விபரங்கள் யாருக்கும் தேவையில்லை. அது முதலீடு செய்தவர்களுக்கும் அதை வியாபாரம் செய்தவர்களுக்கும் மட்டும் தெரிந்தால் போதும்' என்று கூறியுள்ளார்.

இயக்குனர் சிவாவின் இந்த பளீச் பதிலுக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  அதே போல் ரசிகர்கள் வசூல் தகவல்கள் குறித்த மோதல்களை கைவிட வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என வேண்டுகோள் வைத்துள்ளர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!