
தங்களது 26 வருட கால நட்பை மறக்காமல் ‘இந்தியன் 2’ படவெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். ஆனால் அச்செய்தியில் கமல் பெயரையோ, இசையமைப்பாளர் அனிருத் பெயரையோ குறிப்பிடாமல் பொத்தாம்பொதுவாக டீம் என்று முடித்துக்கொண்டார்.
1993ல் வெளியான ‘ஜெண்டில்மேன்’ முதல் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘2.0’ வரை ஷங்கர் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத அம்சமாக இருந்து வந்தது. தனது சொந்தத் தயாரிப்புகளுக்கு வேறு சில இசையமைப்பாளர்களை வைத்துக்கொண்ட ஷங்கர் தனது படங்களில் ‘அந்நியன்’ தவிர மற்ற அனைத்துப்படங்களிலும் ஏ.ஆர். ரஹ்மானையே இசையமைப்பாளராக நியமித்து வந்தார்.
கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘இந்தியன்’ படத்துக்கும் ரஹ்மானே இசையமைத்திருந்தார். அப்படத்தின் பார்ட் 2 பற்றிய செய்திகள் வெளியானபோது மீண்டும் ரஹ்மானே இசையமைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ ரஹ்மான் மறுக்க, அனிருத் உள்ளே வந்தார்.
இதனால் ஷங்கருக்கும் ரஹமானுக்கும் இடையே மனக்கசப்பு என்று பேசப்பட்ட நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில்... Wishing you and your team for yet another block buster ! Good luck buddy 🌹 — A.R.Rahman (@arrahman) என்று வாழ்த்தியுள்ளார். ஷங்கரும் தனது நன்றியை அதே ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவ்வளவு சம்பிரதாயமான வாழ்த்துகளைப் பார்க்கும்போது இனி இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.