
கேரளாவில் சினிமா "பாரடைசோ கிளப்" என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த அமைப்பின் மூலமாக திரையுலகில் சாதித்தவர்களுக்கு சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு சினிமா விருதுகளை வழங்குவதற்காக அனைத்து சினிமாக்களும், நடிகர், நடிகைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவர்களில் நடிகர் திலீப் மற்றும் குணசித்திர நடிகர் அலான்சியர் ஆகியோரது பெயர்கள் மட்டும் புறக்கணிக்கப்படுகின்றன.
நடிகை கடத்தல் வழக்கில், சிக்கிய நடிகர் திலீப்பின் பெயரும் நடிகை ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரின் பேரில் அலான்சியர் ஆகியோரது, பெயரும் நீக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இவர்கள் இருவரும், நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகருக்கான விருதுகளில் கலந்து கொள்ள முடியாது அதே நேரத்தில் அவர்கள் படத்தில் இவர்கள் நடித்த படங்கள் பிற விருதுகளில் போட்டியிட எந்த தடையும் இல்லை என்று அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.