யாரு மாஸ்னு காட்ட 7 போதுமா? மரண ஹிட் அடிக்கப்போவது எது? பேட்டயா? விஸ்வாசமா? ஒரு அலசல்...

By sathish kFirst Published Jan 9, 2019, 11:43 PM IST
Highlights

’பேட்ட’ படத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, நவாசுதீன், பாபி சிம்ஹா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், விஸ்வாசம் படத்தில் தனி ஆளாக ‘அஜித்’  மரண வெயிட்டிங்கில் ரசிகர்களை வைத்துள்ளார். 

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் பேட்ட, தல அஜீத் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. அஜித்தின் விஸ்வாசம் பேட்ட படத்திற்கு முன்பே அதிகாலை 1:30 மணிக்கு ஸ்பெஷல் காட்சி வெளியிடுகின்றனர்.கடந்த ஆண்டு தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியான நிலையில், அடுத்ததாக இப்போது பேட்ட படமும் வெளியாக இருக்கிறது.

அஜீத் நடித்த விஸ்வாசம் படம், அஜீத் - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம். இதற்கு முன்பாக வெளியான விவேகம் படம் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், அடுத்த படத்தையும் சிவா இயக்கத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானபோது ரசிகர்கள் திகைத்துத்தான் போயினர். 

இருந்தபோதும் விஸ்வாசம் படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மே மாதம் துவங்கியது. விரைவிலேயே படம் ஜனவரி மாதம் வெளியாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தூக்குதுரை என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் அஜீத், அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆக்ஷனும் குடும்ப சென்டிமென்டும் நிறைந்த படமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார் சிவா.

ரஜினிகாந்தின் பேட்ட படத்தைப் பொறுத்தவரை, ட்ரைலருக்கும் பாடல்களுக்கும் கிடைத்த அமோகமான வரவேற்பே படக்குழுவை பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் காளி பாத்திரத்தில் பழைய ரஜினியைப் பார்க்க முடிவதாக ரஜினி ரசிகர்களிடம் பெரும் உற்சாகம் தென்படுகிறது. இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெறும் என்கிறார்கள்.

இந்த இரு திரைப்படங்களும் தமிழகத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகின்றன என்பது குறித்து துல்லியமான தகவல்கள் இதுவரை இல்லை ஆனால், பேட்ட படத்தின் ரன்னிங் டைம் விஸ்வாசம் படத்தை விட 30 நிமிடம் அதிகமாக இருப்பதால் அதிக காட்சிகள் போடுகிறார்களாம், ஆனால் இரு படங்களும் சராசரியாக தலா 500 தியேட்டர்களில் வெளியாவதாக சொல்லப்படுகிறது.  காலா, 2.0 ஆகியவை 700 முதல் 750  தியேட்டர்களில் வெளியாகின. அஜீத்தின் முந்தைய படமான விவேகம் சோலோவாக ரிலீஸானதால் சுமார் 600 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

ஆனால், தெலுங்கில் என்.டி. ராமாராவின் வாழ்க்கை சரிதமான என்.டி.ஆர். கதாநாயகடு மற்றும் ராம் சரண் நடித்துள்ள விநய விதேய ராமா படங்கள் வெளியாவதால் பேட்ட படத்திற்கு குறைவான திரையரங்குகளை கிடைத்திருக்கின்றன. 2.0ன் தெலுங்கு பதிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், தற்போது குறைவான திரையரங்குகளில் "பேட்ட" ரிலீஸ் ஆனாலும் வசூலை குறைக்கக்கூடும். ஆனால், உள்ளூர் நடிகர்களின் படங்கள் வெளியாவதால், உஷாரான விஸ்வாசம் படத்தின் தெலுங்குப் பதிப்பு ஜனவரி பத்தாம் தேதி வெளியாகவில்லை. குடியரசு தினத்தன்று வெளியாக இருக்கிறதாம்.

பொங்கல் ஜனவரி 15ஆம் தேதிதான் கொண்டாடப்படும் என்றாலும் நீண்ட விடுமுறையை மனதில் வைத்து இரண்டு திரைப்படங்களுமே ஐந்து நாட்கள் முன்னதாக ஜனவரி பத்தாம் தேதியே ரிலீஸாகின்றன. இரு திரைப்படங்களுக்குமே முதல் மூன்று நாட்களுக்கான முன்பதிவுகள் சக்கைப்போடு போட்டுள்ளது, இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் செம்ம குஷியில் உள்ளார்களாம். ஏ சென்டர் விஸ்வாசம், பேட்ட நாளைக்கு இரண்டு படங்களும் ஹவுஸ்ஃபுல், 

விஸ்வாசம் படத்தின் தமிழ்நாட்டு உரிமை மட்டும் ரூ.52 கோடி அளவிற்கு விற்பனையாகியுள்ளது. எனவே ரூ.85 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்தாலே, தமிழ்நாட்டில் ’விஸ்வாசம்’ மெகா சாதனை. அதுவும் பொங்கலுக்கு தொடர்ந்து 6 நாள் அரசு விடுமுறை, நாளை மற்றும் அதற்கு மறுநாள் என மொத்த 7 நாள் இருப்பதால் கல்லா கட்டுவதில் சிரமம் இருக்காது. அதேபோல, முதல் மூன்று நாள் ரசிகர்களின் கட்டுப்பாட்டில் விருக்கும் விஸ்வாசம் அடுத்தடுத்து வரும் நாட்களில் குடும்பங்கள் தியேட்டருக்கு படையெடுக்கும்,

அதனால் பாசிடிவ் விமர்சனங்கள் வந்தாலே போதும். படம் மரண ஹிட்  அடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பேட்ட படம் விமர்சனம் எப்படி இருந்தாலும் எ சென்டரில் படம் ஹிட் அடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் பி மற்றும் சி சென்டர்களில் விஸ்வாசமே பேட்டயை வேட்டையாடும் என சொல்கிறார்கள்.

click me!