பாக்ஸ் ஆபீசில் வசூல் வேட்டையாடப்போவது விஸ்வாசம் தான்! பேட்ட நிலவரம் என்ன?

By sathish kFirst Published Jan 9, 2019, 8:37 PM IST
Highlights

விஸ்வாசம் படம் போன்று அதிகரிக்கப்பட்ட டிக்கெட் விலைப்படி இப்படம் முதல் நாளில் வெறும் 10 கோடி தான் மொத்த வசூல் செய்யும் வாய்ப்பு உள்ளதாம் ஆனால் விஸ்வாசம் 15 கோடிக்கு மேல் வசூல் அள்ளும் என சொல்கிறார்கள்.

இதுவரை வசூல் மன்னனாக இருந்த ரஜினிகாந்த் கபாலி, காலா, 2.0 போன்ற படங்கள்  அதலபாதாளத்தில் தள்ளியது.  இதனால், குறுகிய கால தாயரிப்பாக பேட்ட படம் 150 கோடி ரூபாய் செலவில் உருவானது  நாளைவெளியாகிறது.

அதேபோல, தமிழ் சினிமாவின் ஓப்பனிங் கிங் என பெயரெடுத்த மாஸ் மன்னன் அஜித் படமான விஸ்வாசம் 100 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளதும் நாளை பேட்ட படத்தை எதிர்கொள்ளும் வகையில் ரிலீஸ் செய்யப்படுகிறது, திரையரங்குகள் குறைவாக இருந்தாலும், முதல் மூன்று நாட்களுக்கு பேட்ட படத்தைவிட அதிகமான காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. எதிர்பார்ப்பிலும் இப்படம் முதல் இடத்தில் உள்ளது.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான இவர்களின் படமானது, தொடர்ந்து விடுமுறை உள்ளதால் சுமார் 120 கோடி ரூபாய் வரை தியேட்டர் வசூல் இருக்கும். ஆனால், எந்தப் படம் அதிக வசூலை குவிக்கும் என்பது நாளை தெரிந்துவிடும். அஜித் நடித்திருக்கும் குடும்ப சென்டிமென்ட் நிறைந்த இப்படத்தை குடும்பங்கள் கொண்டாடினால் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி நிச்சயம் என்கிறது தியேட்டர் வட்டாரம்.

இளைஞர்கள் விரும்பும் நடிகராக அஜித் இருப்பதால் முதல் நாள் முதல் ரசிகர்கள் மன்ற காட்சி நள்ளிரவு ஒருமணிக்கு வெளியாக உள்ளதால் அந்த காட்சிக்கு 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, படம் ரன்னிங் டைம் பேட்ட படத்தைவிட குத்தாய்வு என்பதால் அதிக காட்சிகள் வெளியிட்டு வசூலை அல்ல பிளான் போட்டனர் திரையரங்க உரிமையாளர்கள்.

தமிழகம் முழுவதும் இடத்திற்கு தகுந்தாற்போல் டிக்கெட் விலை வேறுபடுகிறது. விஸ்வாசம் படம் மட்டுமே சுமார் 15 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கபாலி, காலா, 2.0 என மூன்று  படங்களும் அட்டர் பிளாப் ஆன படங்கள் . அதனால், தான் சூப்பர்ஸ்டார் என நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த்.

முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, சசிகுமார், நவாஸுதீன், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா என நட்சத்திர பட்டாளத்தோடு  களமிறங்குகிறார். பிரமாண்ட விளம்பரத்திற்கு சன் பிக்சர்ஸ் என பெரும் நிறுவனம் களத்தில் உள்ளது. ரெட் ஜெயண்ட் இந்த படத்தை வெளியிடுகிறது. திரையரங்குகள் எண்ணிக்கை விஸ்வாசம் படத்தைக் காட்டிலும் குறைவு என்றாலும் படத்தின் மீது ஈர்ப்பையும், எதிர்பார்ப்பையும் பேட்ட படத்தின் விளம்பரங்கள் ஏற்படுத்தியிருக்கிறது.

விஸ்வாசம் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு, டிக்கெட் விற்பனையின் வேகம் ஆகியவை பேட்ட படத்திற்கு இல்லை என்றாலும் குடும்பங்கள் தொடக்க நாளில் இருந்து இப்படத்தை பார்க்க கூடிய வாய்ப்பு உண்டு என்கின்றனர். விஸ்வாசம் படம் போன்று அதிகரிக்கப்பட்ட டிக்கெட் விலைப்படி இப்படம் முதல் நாளில் வெறும் 10 கோடி தான் மொத்த வசூல் செய்யும் வாய்ப்பு என சொல்கிறார்கள்.

click me!