'மெரினா புரட்சி' படத்தின் தணிக்கை விவகாரம் - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!

By manimegalai aFirst Published Jan 9, 2019, 7:40 PM IST
Highlights

2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 8 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'மெரினா புரட்சி' திரைப்படத்திற்கு 100 நாட்களாகியும் தணிக்கை தரப்படவில்லை என்றும் காரணம் சொல்லாமல் 2 முறை நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தீர்வு காணும் வகையில் இந்த படத்தை தயாரித்த, 'நாச்சியாள் பிலிம்ஸ்' சென்னை உயர்நீதி மன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தது. 

மேலும் 'மெரினா புரட்சி' திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்று படக்குழுவினர் தணிகை குழுவினருக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்திருந்தனர். ஆனால் தணிகை குழுவினர் இதனை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தயாரிப்பு தரப்பு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, 7 நாட்களுக்குள் தணிக்கைத்துறை, படத்திலுள்ள நல்ல நோக்கங்கள் மற்றும் அதன் தன்மை அடிப்படையில்  முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.  இதனால் இந்த படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். 
 
click me!