
'மாரி 2 ' படத்தில் இடம்பெற்ற "ரவுடி பேபி", மற்றும் 'சர்கார்' படத்தில் இடம்பெற்ற சிமிட்டான்காரன் பாடல்களின் சாதனையை அஜித்தின் விசுவாசம் படத்தில் இடம்பெற்ற 'அடிச்சு தூக்கு' பாடல் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
தல அஜித் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் விஸ்வாசம். உலகம் முழுவதும் வெளியாகி அஜித் ரசிகர்கள் மட்டும் இன்றி, பெண்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. பலர் இது குடும்பத்தோடு பார்க்க கூடிய சிறந்த படம் என பாராட்டி வருகிறார்கள்.
ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பாடல்கள் லிரிக்கல் வீடியோ வெளியியிட்டதை அடுத்து அந்த பாடல்கள் வீடியோ ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற "அடிச்சு தூக்கு" என்ற வீடியோ பாடல் யூ டியூபில் வெளியாகி இருந்தது. இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே 1 மில்லியன் லைக்ஸ்களை குவித்து குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்ற பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இதன் மூலம் ஏற்கனவே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்குகளை பெற்ற பாடல்கள் என்ற சாதனைகளை படைத்திருந்த மாரி 2 , படத்தில் ரவுடி பேபி மற்றும் சர்க்கார் படத்தில் இடம்பெற்ற சிமிட்டான்காரன் பாடல்களின் சாதனையையும் ஒரே நாளில் முறியடித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.