விசுவாசம் படத்தையும் இந்த பண்டிகையின் போது தான், ரிலீஸ் செய்ய போகிறார்களாம்; இயக்குனர் சிவா அறிவிப்பு..

 
Published : Jun 29, 2018, 03:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
விசுவாசம் படத்தையும் இந்த பண்டிகையின் போது தான், ரிலீஸ் செய்ய போகிறார்களாம்; இயக்குனர் சிவா அறிவிப்பு..

சுருக்கம்

visuvasam movie also going to hit the screen during this festival

அல்டிமேட் ஸ்டார் அஜீத் தொடர்ச்சியாக சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் தான், சமீப காலமாக நடித்து வருகிறார். அப்படி சிவாவின் இயக்கத்தில் அஜீத் நடித்திருந்த, ”விவேகம்” திரைப்படம் பல இடங்களில் நல்ல வரவேற்பையும், கலவையான விமர்சனங்களையும் பெற்றிருந்தது.

அதை தொடர்ந்து தற்போது மீண்டும் சிவா இயக்கத்தில், அஜீத் நடித்துவரும் திரைப்படம் தான் ”விசுவாசம்”. புதிய கெட்டப்பில் அஜீத் இந்த படத்தில் நடைத்து வருகிறார். மேலும் ”விசுவாசம்” படத்தின் கதை இது தான். என இணையத்தில் கூட சில செய்திகள் வெளியாகி இருந்தன. அதன் பிறகு தற்போது தான் விசுவாசம் திரைப்படம் குறித்த, சுவாரஸ்யமான தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுவரை விசுவாசம் படத்திற்கான 40 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று  ”மணியார் குடும்பம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இத்திரைப்படத்தில் தம்பி ராமையாவின் மகன் நடித்திருக்கிறார். இதனால் இயக்குனர் சிவா இந்த நிகழ்வில் நட்பின் அடிப்படையில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் ”விசுவாசம்” படத்தினை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அஜீத் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறது. நயன்தாரா கதாநாயகியாக நடித்துவரும் இந்த திரைப்படத்தில், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் இமான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்
ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!