
தளபதி விஜய் நடிப்பில் மும்முரமாக தயாராகி வருகிறது சர்கார் திரைப்படம். இந்த திரைப்படத்தினை இயக்குனர் முருகதாஸ் இயக்கி வருகிறார். தளபதி நடிப்பில் தமிழ் திரையுலகையே மெர்சலாக்கிய, மெர்சல் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் சர்கார்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த திரைப்படத்தினை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறது சர்கார் படக்குழு. அரசியல் அதிரடி கலந்த படம் என்பதால் சர்காருக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
மேலும் வரலஷ்மி சரத்குமாரும் சர்கார் திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார், ராதாரவி கரு.பழனியப்பன் போன்ற பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் கூட சர்கார் படத்தின் தீம் மியூசிக், இசையமைக்க பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
சர்கார் படம் குறித்து அவ்வப்போது கொஞ்சம் அதிரடியான தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுவது வழக்கம். இம்முறை அப்படி வந்திருக்கும் ஒரு செய்தி மிகுந்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் பல பிரம்மாண்ட காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. சமீபத்தில் கூட அப்படி ஒரு பிரம்மாண்ட காட்சி எடுக்கப்பட்டது, அதில் அதிக அளவிலான ஸ்டண்ட் கலைஞர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
மிகப்பெரிய பைக் ஊர்வல காட்சியாக எடுக்கப்பட்ட அந்த ஸ்டண்ட் காட்சியின் முடிவில், ஸ்டண்ட் கலைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே, நிஜமாகவே சண்டை வந்துவிட்டதாம். இதனால் அந்த கூட்டத்தை பார்த்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அங்கிருந்து கஷ்டப்பட்டு தப்பி சென்றாத கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.