கெளதம் மேனன் படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகர்!

Asianet News Tamil  
Published : Dec 30, 2017, 08:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
கெளதம் மேனன் படத்தில் இருந்து விலகிய பிரபல நடிகர்!

சுருக்கம்

vishnu vishal removed in gowtham menon movie

இயக்குனர் கெளதம் மேனன் படங்களில் நடிக்க வேண்டும் என்பது தற்போதைய நடிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. காரணம் அவர் இயக்கம் மற்ற இயக்குனர்களை ஒப்போடும் போது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். இப்போது கெளதம் மேனன் துருவ நட்சத்திரம், என்னை நோக்கி பாயும் தோட்டா  ஆகிய படங்களின் வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

இந்த படங்களை தொடர்ந்து 'பொன் ஒன்று கண்டேன்' என்ற படத்தை தயாரிக்க இருந்தார். இப்படத்தில் விஷ்ணுவிஷால் மற்றும் தமன்னா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்தன .

இந்த படம்  தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பெல்லி சோப்புலு' படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக இந்த படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதற்கு காரணம் தேதி பிரச்சனை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விஷ்ணு விஷால், சிலுக்குவார்பட்டி சிங்கம், சில்ரல்லா, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Malavika Mohanan : பார்த்தாலே கிக்!! இறக்கமான சுடிதாரில் மாளவிகா மோகனின் நச் போஸ்..
Karuppu Pulsar: லப்பர் பந்து ஹிட்-க்கு பின் தினேஷின் 'கருப்பு பல்சர்' - எதிர்பார்ப்பை எகிற வைத்த டிரெய்லர்!