ஒல்லியாக மாறுவது எப்படி? ஐடியா கொடுத்த கலா மாஸ்டர்!

 
Published : Dec 30, 2017, 07:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
ஒல்லியாக மாறுவது எப்படி? ஐடியா கொடுத்த கலா மாஸ்டர்!

சுருக்கம்

how to reduce the fat kala master give the idea

வெள்ளித்திரையில் மின்னும் பல பிரபலங்களுக்கு நடன குருவாக விளங்குபவர் நடன இயக்குனர் கலா. இவர் சிறு வயதில் இருந்தே மிகவும் ஒல்லியாக இருந்தவர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் திடீர் என தைராய்டு உள்ளிட்ட ஒரு சில பிரச்சனைகளால் குண்டாக மாறினார்.

இப்போது மீண்டும் தன்னுடைய உடல் எடையை கணிசமாகக் குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதானால் இவரைப் பார்த்தவர்கள் பலர் கலா மாஸ்டருக்கு உடல் நலம் சரி இல்லையா என்று கூட தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தனர் என்று கூறப்படுகிறது.

உண்மையில் கலா மாஸ்டர் ஒல்லியாக மாற காரணம் அவர் எடுத்துக்கொண்ட டயட் தானாம். இது குறித்து தற்போது கலா மாஸ்டர் கூறியிருப்பது....

12 வயதில் இருந்து சினிமாவில் ஓய்வில்லாமல் இரவு பகலாக உழைச்சேன், ஒரு நாள் கூட சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொண்டது இல்லை. பல பிரபலங்களும் என்னை ஒல்லிக் குச்சி கலா என்று தான் கூப்பிடுவார்கள். இதன் விளைவு தைராய்டு மற்றும் உடல் எடை கூடியது.

உடல் பருமனால், முதுகு வலி, மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தேன் இதனால்  டயடிசியன் உதவியோடு டயட்டை முறையான கடைபிடிக்க துவங்கினேன். தற்போது 76 கிலோவில் இருந்து 59 கிலோவாக குறைத்து விட்டேன்.

முதல் நாலு வாரம் எந்த திட உணவும் எடுத்துக்கொள்ள வில்லை, ஜூஸ் மற்றும் திரவ உணவு மட்டுமே எடுத்துக்கொண்டேன். மேலும் யோகா, நடைப் பயிற்சி, ஹெவி உடல்பயிற்சி செய்யத் துவங்கினேன் இப்போது உடல் எடை குறைத்து புத்துணர்ச்சியாக உணர்கிறேன் என கூறியுள்ளார். 

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக ஒரு டயடிசியனை சந்தித்து உங்களுக்கு ஏற்றது போல் உணவு முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கலா மாஸ்டர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்