அய்யய்யோ பாத்துட்டாங்களே... முகத்தை மூடிக்கொண்டு பெண் உடன் தலைதெறிக்க ஓடிய விஷால் - வைரலாகும் வீடியோ

By Ganesh A  |  First Published Dec 26, 2023, 11:50 AM IST

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகனான விஷால் பெண்ணுடன் ரோட்டில் தலைதெறிக்க ஓடியபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.


இயக்குனர் ஆகும் ஆசையுடம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த விஷால், ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதையடுத்து அவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வந்ததால் தன்னுடைய இயக்குனர் ஆசையை மூட்டைகட்டி வைத்துவிட்டு முழு நேர ஹீரோவாக மாறினார் விஷால். சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே செல்லமே, தாமிரபரணி, சண்டக்கோழி, திமிரு என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து பிரபலமானார் விஷால்.

கடந்த சில ஆண்டுகளாக விஷாலுக்கு பெரியளவில் எந்த படமும் வெற்றியடையாமல் இருந்தது. இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார் விஷால். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படமாகவும் மார்க் ஆண்டனி மாறியது. இதனால் செம்ம சந்தோஷத்தில் உள்ளார் விஷால்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விஷால் நடிப்பில் தற்போது ரத்னம் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. ஹரி இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. இப்படத்தை முடித்ததும் தன்னுடைய கனவு படமான துப்பறிவாளன் 2 படத்தை எடுக்க உள்ளார் விஷால். இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு அப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுக்க உள்ளார் விஷால்.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் நடிகர் விஷால், அங்குள்ள நியூயார் நகரத்தில் இளம்பெண் ஒருவருடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஒருவர் தங்களை வீடியோ எடுப்பதை பார்த்து பதறிப்போன விஷால் முகத்தை மறைத்துக்கொண்டு அந்த பெண் உடன் தலைதெறிக்க ஓடிய வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அந்தப் பெண் விஷாலின் லவ்வரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருசிலரோ இது ஏதேனும் புரமோஷனாக இருக்குமோ என சந்தேகிக்கின்றனர்.

Is that Actor walking with someone in NYC 🤔 pic.twitter.com/ddMESEuKOq

— Ramesh Bala (@rameshlaus)

இதையும் படியுங்கள்... கையில் ஒயின்... கண்ணில் காதலுடன் படு நெருக்கமாக கிறிஸ்துமஸை கொண்டாடிய அமீர் - பாவனியின் ரொமாண்டிக் கிளிக்ஸ்

click me!