
பேய் கதைகள் தமிழ் சினிமாவிற்கு சலித்து விட்ட நிலையில், அதிலும் ஒரு புதுமையை புகுத்தி வெற்றி கண்ட இயக்குனர் தான் செல்வின் ராஜ் சேவியர். இவருடைய இயக்கத்தில் கடந்த டிசம்பர் 8ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் காஞ்சூரிங் கண்ணப்பன். இந்த திரைப்படத்தை பிரபல ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த நிலையில் யுவனின் இசை இந்த திரைப்படத்தின் மாபெரும் பலமாக அமைந்தது.
கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் சதீஷ் அவர்களுக்கு அவருடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படமாக காஞ்சூரிங் கண்ணப்பன் மாதிரி உள்ளது என்றால் அது மிகையல்ல. பேய் படம் என்றாலும் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு முன்னணி நடிகர்களான நாசர், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இன்னும் குறிப்பாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களின் அன்னபூரணி படத்திற்கு கிடைத்த வரவேற்பை காட்டிலும் காஞ்சுரிங் கண்ணப்பனுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடினர்.
அதை முன்னிட்டு காஞ்சுரிங் கண்ணப்பன் திரைப்படத்தின் நாயகன் சதீஷ் அவர்கள், இயக்குனரை நேரில் சந்தித்து அவருக்கு தனது வாழ்த்துக்களை கூறியதோடு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபலமான EA (Emporio Armani) வாட்ச் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.