மக்களுக்கு நல்லது செய்யுற அனைவரும் அரசியல்வாதிகள் தான் – விஷால் !

 
Published : Jan 20, 2018, 07:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
மக்களுக்கு நல்லது செய்யுற அனைவரும் அரசியல்வாதிகள் தான் – விஷால் !

சுருக்கம்

vishal taking in irumbuthirai movie audio launch

இரும்புத்திரை இசை வெளியீட்டு விழா:

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்புதிரை, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.  இதில் நாயகன் விஷால் , விஷாலின் தாயார் லட்சுமி தேவி , தந்தை ஜி.கே. ரெட்டி , இயக்குநர் மித்ரன் ,இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா , நடிகை குட்டி பத்மினி , இயக்குநர் லிங்குசாமி , கில்ட் ஜாகுவார் தங்கம் , தயாரிப்பாளர்சத்ய ஜோதி தியாகராஜன் , நடிகர் ராஜ் கிரண் , தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் , FEFSI R.k. செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 
உதவி: 

விழா துவங்கியதும் கிட்னி பைலியர் நோயால் பாதிக்கப்பட்டவரின் மகனான விஷால் வர்ஷனுக்கும் ,கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவரின் மகளான மகாலட்சுமியின் கல்விக்கும் உதவும் வகையில் விஷாலின் தாயார் லட்சுமி தேவி அவர்களுக்கு நன்கொடைவழங்கினார். 


 
விஷால் பேச்சு :

சமூக பிரச்னையை பற்றி படத்தில் பேசும் போது அது மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும். யுவன் ஷங்கர் ராஜா என்னுடைய குடும்ப நண்பர். அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும்.  யுவன் இசையில் பாடல் நன்றாக வந்துள்ளது.படத்தின் பின்னணி இசைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இரும்புத்திரை மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம். 

அதை இந்திய இராணுவத்தோடு சம்பந்தப்படுத்தி எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் மித்ரன்.  இப்படத்தில் இடம்பெறும் ஊழல் எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்ற ஒன்றாக இருக்கும். இப்படம் தாமதமாக வெளியாவதற்கு நான்தான் காரணம் அதற்கு மனிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த டிஜிட்டல் யுகத்தில்  இரும்புத்திரை முக்கியமான திரைப்படம். இப்படத்தில் வரும் பிரச்னையை என்னுடைய தந்தையும் தன் வாழ்வில் சந்தித்துள்ளார்.

என்னுடைய தந்தை போல் எனக்கும் மிலிட்டரி ஆபிசர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது.  இப்போது இந்த படத்தில் இராணுவ வீரனாக நடித்துள்ளேன்.  மக்களுக்கு நல்லது செய்யுற அனைவரும் அரசியல்வாதிகள் தான்.  இரும்புத்திரை என்னுடைய 24வது திரைப்படம். என்னுடைய அனைத்து படங்களுக்கும் ஆதரவு அளித்ததற்கு நன்றி என்றார் விஷால்.
 
R.K. செல்வமணி பேசியது :

அதிரடி பாடலில் விஷாலை பார்த்தபோது அமிதாப் பச்சனை பார்த்தது போல் இருந்தது.  விஷால் ஒரு சிறந்த நடிகர். நான் பேசுவதற்கு மேடை 2௦ வருடம் கழித்து தான் எனக்கு கிடைத்தது.  இயக்குநர் மித்ரன் பேசுவதை பார்க்கும் போது நன்றாக இருந்தது. இளம் இயக்குநர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார் R.K.செல்வமணி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!
அபிராமிக்கு பதில் சாமுண்டீஸ்வரி செத்திருக்கலாம்! கதறி அழுத ரசிகர்கள் - சீரியல் குழுவை காரித் துப்பும் நெட்டிசன்கள்!