
நடிகை பாவனாவிற்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைதான் தற்போது இந்திய சினிமா துறையில் ஹாட் டாபிக்காக பேச பட்டு வருகிறது இந்த சம்பவம் குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் இதுகுறித்து கூறுகையில்....,
'கேரளாவில் நடிகை பாவனாவுக்கு நடந்த சம்பவம் அனைவரும் அறிந்ததே நிஜமாகவே நடிகை பாவனாவின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன் ஏனென்றால் இதை போல் ஒரு சம்பவம் நடந்தால் இதை பற்றி வெளியில் சொல்ல அனைவரும் கூச்சப்படும் ஒரு சமயத்தில் நடிகை பாவனா அவருக்கு நடந்த சம்பவத்தை வெளியில் வந்து சொல்லியிருக்கிறார். அவருடைய தைரியத்தை நான் வணங்குகிறேன்.
இதை போல் ஒரு சம்பவம் நடந்திருக்க கூடாது. ஒரு நடிகைக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதர்களின் நிலைமையை நினைத்து பாருங்கள். நாங்கள் ஏற்கனவே ஒரு கடிதத்தை நடிகர் சங்கம் சார்பில் கேரள முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ளோம். இன்று மீண்டும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் சார் கையெழுத்தோடு இன்று அனுப்பவுள்ளோம்.
குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு தண்டனை மிக கொடூரமாக இருக்க வேண்டும், அப்போது தான் இனி அந்த ஒரு விஷயத்தில் இறங்க பயப்படுவார்கள், யோசிப்பார்கள்.
நாங்கள் கேரள நடிகர் சங்கமான “அம்மா“வை தொடர்பு கொண்டு அவர்களுக்கு இந்த விஷயத்தில் எங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளோம். இந்த விஷயத்தை பொறுத்தவரை உடனடியாக விரைந்து நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம்.
இதை போல் ஒரு சம்பவம் நடந்திருக்க கூடாது, என்னுடைய இதயம் வலிக்கிறது. நாங்கள் அனைவரும் இச்சமயத்தில் நடிகை பாவனாவுக்கு துணையாக இருக்கிறோம். இந்த செயலை செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். போலிஸ் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் கேரள முதல் அமைச்சருக்கு நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம்' என்று விஷால் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.