அப்பாடா நிம்மதி..!! - விஷாலை காப்பாற்றியது உயர்நீதிமன்றம்

 
Published : Feb 03, 2017, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
அப்பாடா நிம்மதி..!! - விஷாலை காப்பாற்றியது உயர்நீதிமன்றம்

சுருக்கம்

எல்லோருக்கும்பேச்சுரிமை உள்ளது - சஸ்பெண்ட் ரத்து செய்கிறீர்களா அல்லது நான் உத்தரவு பிறப்பிக்கவா என்று தலைமை நீதிபதி நேற்று வைத்த செக்கினால், ஆடி போன தயாரிப்பாளர் சங்கம், விஷால் மீதான நடவடிக்கையை ரத்து செய்ததாக அறிவித்தது.

நடிகர் விஷால் மீது எடுத்த சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யப்பட்டதாக, தயாரிப்பாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் நீக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி கல்யாண சுந்தரம் தள்ளுப்படி செய்தார்.

இதை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், எம்.சுந்தர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகர் விஷால் தரப்பில், தனிப்பட்ட முறையில் தான் யாரையும் விமர்சிக்கவில்லை எனவும், அவ்வாறு இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மனு தாக்கல் செய்து உள்ளதாக விஷால் தரப்பு வாதிட்டது.

இதனையடுத்து, தலைமை நீதிபதி, அனைவரும் பேச்சுரிமை உள்ளது. எதிர்த்து பேசுவதற்கு இது நடவடிக்கைகள் என்றால் சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் பேசுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கமுடியும் என நீதிபதிகள் தயாரிப்பாளர் சங்க வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவருக்கு எதிரான நடவடிக்கை திரும்ப பெற வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியது. இல்லையென்றால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.

அப்போது தாயாரிப்பாளர் சங்க தேர்தல் வழக்கறிஞர், இது குறித்து கேட்டு பதிலளிப்பதாக கூறினார்.

அதனை தொடர்ந்து இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திரைப்பட தாயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழு கூட்டத்தில், நடிகர் விஷால் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்தது இந்த வழக்கை முடித்து வைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!