
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் கொடுத்து, இன்று முன்னனி நாயகர்களில் ஒருவாறாக வளர்த்திருப்பவர் நடிகர் சிம்பு, இவரும் தன்னுடைய தந்தை டி.ராஜேந்தர் போலவே ஆடல், பாடல், நடிப்பு என சகலகலா வல்லவர் என்று கூட சொல்லலாம்.
சிம்பு நடித்ததில் மிகவும் மனதை தொட்ட படங்கள் ஹரி இயக்கிய 'கோவில்', சிம்பு நடித்த இயக்கிய 'வல்லவன்', கெளதம் மேனன் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயோ', பாண்டிராஜ் இயக்கிய 'இது நம்ம ஆளு', ஆகிய படங்கள் சிம்புவுக்கு மேலும் பெருமை சேர்த்தது.
தற்போது சந்தானம் நடிக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்தில் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் கிசுகிசு , பீப் பாடல் போன்ற பல சர்ச்சைகளில் சிக்கினாலும், சமூக அக்கறையும், மனதில் தோன்றியதை தைரியமாக வெளியே சொல்லும் குணமும் உடையவர். சமீபத்தில் நடந்த மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு திரையுலகில் இருந்து முதல் ஆதரவுக்குரல் கொடுத்தவர்களில் சிம்புவும் ஒருவர்.
இந்நிலையில் சிம்பு தனது நண்பர்களுடன் கேக் வெட்டி தாது 34வது பிறந்தநாளை கொண்டாடினர், மேலும் ரசிகர்களுடனும் சிம்பு பிறந்தநாள் கொண்டாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருடம் இசையமைப்பாளராக தனது புதிய பணியை தொடர்ந்திருக்கும் சிம்பு திரையுலகில் மேலும் ஜொலிக்க நியூஸ் பாஸ்டின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.