
நடிகர் சங்க கட்டிடம் கட்டியவுடன் தான் திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருக்கிறார். விரைவில் விஷால் வீட்டில் ஒரு திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அந்த திருமணம் வேறு யாருக்கும் இல்லை விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு தான். விரைவில் இவரின் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், சமீபத்தில் மாப்பிள்ளை வீட்டார்கள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தாலியை அம்மன் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஷாலின் தயாரிப்பு நிறுவனம், ஆடியோ நிறுவனம் ஆகிய நிறுவனங்களை நிர்வகித்து வரும் ஐஸ்வர்யாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தும் விருப்பம் இல்லாத காரணத்தால் அவர் நடிகையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் விஷால் வீட்டார் ஐஸ்வர்யாவின் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.