
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் விஷால், தயாரிப்பாளர்களின் வளர்ச்சிக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்த நிலையில் தற்போது அவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அனைத்து தயாரிப்பாளர்களுக்கு விஷால் அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: 'அன்புள்ள திரைப்பட முதலாளிகளுக்கு நமது திரைப்படத்தின் பாடல்கள், கிளிப்பிங்ஸ், டிரைலர் மற்றும் கடிதம் எதுவும் எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் இன்று முதல் இலவசமாக தர வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். மானம் காப்போம், வருமானம் பெருக்குவோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை தயாரிப்பாளர்கள் தங்களது படங்கள் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்ற விளம்பர நோக்கத்துடன் சாட்டிலைட் தொலைக்காட்சிகளுக்கு டிரைலர், கிளிப்பிங்ஸ் ஆகியவற்றை இலவசமாக கொடுத்தனர்.
ஆனால் இந்த டிரைலரையும் கிளிப்பிங்ஸ்களையும் வைத்தே பல நிகழ்ச்சிகளை உருவாக்கி சாட்டிலைட் சேனல்கள் பணம் சம்பாதித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதால் பல சாட்டிலைட் சேனல்கள் ஆடி போய் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.