களத்தில் இறங்கிய விஷால்...நாளை முதலமைச்சரை சந்திக்கிறார்...

 
Published : May 11, 2017, 05:45 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
களத்தில் இறங்கிய விஷால்...நாளை முதலமைச்சரை சந்திக்கிறார்...

சுருக்கம்

vishal meet chiefminister

சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால், மத்திய,மாநில அரசுகளுக்கு தயாரிப்பாளர்கள் சார்பாக ஒரு சில கோரிக்கைகளை வைத்தார். 

இந்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த திரையுலகினர்களும், இணைந்து வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.

ஆனால் தற்போது வரை, தயாரிப்பாளர் பிரச்சனைகள் குறித்து, மத்திய மாநில அரசுகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. 

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முக்கிய தலைவர்களான, விஷால், நாசர், பிரகாஷ்ராஜ், கார்த்தி, உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது தமிழ் திரையுலகின் பிரச்சனைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்து உரைக்கப்படும் என்றும் குறிப்பாக திருட்டு டிவிடி பிரச்சனை, திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் முதல்வரிடம் இருந்து உறுதிமொழி கிடைத்தால் வேலைநிறுத்தம் தவிர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடேங்கப்பா... 2025ல் மட்டும் இத்தனை தமிழ் சீரியல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதா? முழு லிஸ்ட் இதோ
தங்கமயில் முதல் கோமதி வரை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்!