சீனாவில் 100 கோடி வசூலித்த ஆமீர் கானின் ‘தங்கல்’... பாகுபலி 2 வை நெருங்க முடியாமல் திணறல்... 

First Published May 11, 2017, 5:44 PM IST
Highlights
Baahubali 2 The Conclusion all set to cross lifetime business of Aamir Khan s Dangal


சினிமாவில் நல்ல விஷயங்களை எப்போதும் கொடுப்பாவர் என்றால் அது ஆமீர் கான் என்று சொல்லலாம் நல்ல கதைகளை தேடி ஹிந்தி படங்களில் கொடுத்து அதில் மிக பெரிய வெற்றி பெறுபவர் என்றும் சொல்லலாம். 

இவரின் படைப்பில் எப்பவும் ஒரு சமுக அக்கறை உள்ள கதைகள் தான் அதிகம் இருக்கும் அது வர்த்தகரீதியாக படமாக இருந்தாலும் அதிலும் ஒரு சின்ன கருத்து கண்டிப்பாக இருக்கும் அப்படி எடுத்து சமீபத்தில் மிக பெரிய வெற்றி கண்ட படம் என்றால் அது தங்கல் படம் என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம் இந்த படம் தற்போது சீனாவில் வெளியாகி மிக பெரிய வெற்றி மட்டும் இல்லாமல் வசூலில் சாதனை புரிந்துள்ளது.

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியான படம் ‘தங்கல்’. 2016-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தியாவில் வெளியான 3 நாட்களில் சுமார் ரூ.100 கோடியைத் தாண்டி வசூல் செய்து படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளிலும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வந்தது ‘தங்கல்’ தற்போது சீனாவில் இப்படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. அங்கும் வசூலைக் குவித்து வருகிறது.

சீனாவில் ‘தங்கல்’ வெளியான 5 நாட்களில் 123.67 கோடி வசூல் செய்திருப்பதாக பாலிவுட் திரையுலகின் வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ‘தங்கல்’ படத்தின் சாதனைகள் அனைத்தையும் ‘பாகுபலி 2’ முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!