
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் "வாணி ராணி" என்கிற சீரியலில் வில்லி நடிகையாக நடித்தவர் சபீதா ராய்.
இவர் சமீபத்தில் இந்த சீரியலை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஒருவருடன் குடித்து விட்டு நாடு ரோட்டில் அடி, பிடி சண்டையில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி பல சேனல்களில் தலைப்பு செய்தியாக வெளியாகியது.
இந்த பிரச்சனையில் சிக்கியதால் சீரியலில் நடிக்க வாய்ப்பில்லாமல் போனது. சில ஊடங்கங்கள் செய்தியை தவறாக சித்தரித்து பதிவிட்டது குறித்து சபீதா ஒரு வீடியோவில் மனம் விட்டு பேசினார்.
தற்போது அவருக்கு விஷால் தான் நடித்து வரும் "இரும்பு திரை" படத்தில் ஒரு ரோல் கொடுத்துள்ளாராம்.
இது பற்றி சபீதா கூறுகையில், சீரியல்களுக்கு பிரேக் கொடுத்துவிட்டு சினிமாவில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளேன். விஷால் அண்ணனுடன் சேர்ந்து நடிப்பதில் சந்தோசம் விரைவில் என் மீது படித்துள்ள கறையும் நீங்கும் என தெரிவித்தார்.
மேலும் இந்த பிரச்சனையில் இருந்து நான் மீண்டு வர விஷால் தான் உதவி செய்தார் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.