குழந்தைகளை கவர்ந்த சச்சின்.... வசூல் நிலவரம்...

 
Published : May 28, 2017, 03:34 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
குழந்தைகளை கவர்ந்த சச்சின்.... வசூல் நிலவரம்...

சுருக்கம்

sachin movie box office

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் வாழ்க்கை வரலாறை தழுவி சச்சின் பல கோடி கனவுகள் என்று படமாக எடுத்துள்ளனர். இந்த படத்தில், ஒரு சில காட்சிகளில் சச்சின் நடித்துள்ளதால் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருந்தது.

ஆனால் இந்த திரைப்படம்  டாக்குமெண்ட்ரீ போல் இருப்பதால் ரசிகர்கள் இதனை ஏற்பார்களா என்கிற சந்தேகம் இருந்தது

ஆனால், நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் அதிகரித்து வருகின்றது, இதற்கு சச்சின் என்ற தனி நபரே காரணம் என்று கூறப்படுகிறது. விடுமுறை நாட்கள் என்பதால் பலர் தங்கள் குழந்தைகளுடன் அழைத்து வந்து இந்த படத்தை பார்ப்பதாக கூறப்படுகிறது.

முதல் நாள் இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ 9 கோடி வசூல் செய்ய, நேற்று ரூ 9.40 கோடி வசூல் செய்துள்ளது.

இன்று எப்படியும் இப்படம் ரூ  15 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மைதானத்தில் 100 அடிக்கும் சச்சின் வசூலிலும் ரூ 100 கோடியை தொடுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் படக்குழுவினருக்கு மலேசியா போலீஸ் ஸ்ட்ரிக்ட் வார்னிங்: எதுக்கு? ஏன்? பரபரக்கும் பின்னணி!
திறப்பு விழாவிற்கு போகாதீங்க; ரேணுகாவை எச்சரிக்கும் ஞானம் - எதிர்நீச்சல் தொடர்கிறது டுவிஸ்ட்!