
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராக திரைத்துறையினர் போர் கொடி தூக்கியதால் பரபரப்பு நிலவுகிறது.
சென்னை அண்ணா சாலையில் திரைப்பட துறையினருக்கு சொந்தமான பிலிம் சேம்பர் வளாகம் அமைந்துள்ளது. அங்கு ஏற்கனவே உள்ள 4 மாடி கட்டடத்தில் தனியார் நிறுவனங்கள் 3 ஆம் தளத்திலும், 4 ஆம் தளத்திலும் மலையாள, தெலுங்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகங்கள் அமைந்துள்ளது.
தற்போது அதன் அருகிலேயே புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது. அதில் இயக்குனர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட தொழிலாளர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் குறைந்த அளவிலான இடத்தினையே ஒதுக்குவதாக கூறியதாகவும், தாங்கள் ஏற்கனவே கேட்டு எங்களுக்கு தருவதாக வாக்குறுதி அளித்த பரப்பளவில் இடம் ஒதுக்க வேண்டும் எனவும் அச்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் திடீர் என பிலிம் சேம்பரில் கூடி ஆலோசனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து இயக்குனர் விக்ரமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒட்டுமொத்த தமிழ் திரைப்படத்துறைக்கு 25 சதவீதம் இடம் தேவைப்படுவதாகவும், பிலிம் சேம்பர் வளாகத்தில் இயக்குனர் சங்கத்திற்கு இடம் கேட்டோம் எனவும் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.