"அய்யா மன்னிசுக்கங்க....!! தெரியாமல் சொல்லிட்டேன்" - தயாரிப்பாளர் சங்கத்திடம் விஷால் வருத்தம்

Asianet News Tamil  
Published : Jan 04, 2017, 02:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
"அய்யா மன்னிசுக்கங்க....!!  தெரியாமல்  சொல்லிட்டேன்" - தயாரிப்பாளர் சங்கத்திடம்  விஷால் வருத்தம்

சுருக்கம்

திரைப்பட தாயரிப்பாளர் சங்கத்தை விமர்சித்ததற்கு, நடிகர் விஷால்  வருத்தம் தெரிவித்து  சென்ன உயர் நீதிமன்றத்தில் கடிதம் வழங்கினார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்து  நடிகர் விஷால் பத்திரிக்கைக்கு பேட்டியளித்ததையடுத்து , அவரை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கடந்த 14ல் இடைநீக்கம் செய்தனர். 

இதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், தான் கடந்த 2013ம் ஆண்டு முதல் பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தன் மேல் வீண் பழி சுமத்தி வேண்டுமென்றே தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்,  விதிகளுக்கு எதிராக சட்ட விரோதமாக தன்னை இடைநீக்கம் செய்துள்ளதாக மனுவில் கூறியிருந்தார்.  

மேலும் தன்னை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விஷால் தெரிவித்த கருத்திற்கு வருத்தம் தெரிவித்தால், சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிடப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தனது கருத்துக்கு  வருத்தம் தெரிவித்து விஷால் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடிதம் அளிக்கப்பட்டது. இதனை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பெற்றுக்கொண்டு, தாயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் இது தொடர்பாக முடிவு எடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்கிறோம் என  தெரிவித்தார்.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க  வழக்கை  நாளை மறுநாள் ஒத்தி வைத்து நிதிபதி உத்தரவிட்டார்.                        

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தியேட்டரில் வராத 'தாய் கிழவி' பட காட்சிகள்! சென்டிமெண்டும், சுவாரஸ்யமும் நிறைந்த கண்ணீர் வரவழைக்கும் சீன்!
"நோ" சொன்ன ரஜினிக்கு இளையராஜா சொன்ன அந்த 'ஒரு' ஜோசியம்! சூப்பர் ஹிட்டு பாட்டு எது தெரியுமா?!