விவாகரத்து கேட்டு நீதி மன்றம் நாடிய பிரபல நடிகை நந்திதா தாஸ்....!!!

 
Published : Jan 04, 2017, 02:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
விவாகரத்து கேட்டு நீதி மன்றம் நாடிய பிரபல நடிகை நந்திதா தாஸ்....!!!

சுருக்கம்

 தமிழ், மலையாளம், இந்தி  என பல மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை  நந்திதா தாஸ்.

வெள்ளையானவர்கள் மட்டுமே சினிமாவில் கதாநாயகிகளாக நடிக்க முடியும் என்று நினைத்திருந்த நினைப்பை, முற்றிலு, மாற்றி திறமை இருந்தால் போது என நிரூபித்து ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர் நந்திதா தாஸ்.

இவர் தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், நீர்ப்பறவை ஆகிய படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி  கோலிவுட் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.

மேலும் இவர்  2002ம் ஆண்டு சவுமியா சென் என்பவரை  திருமணம் செய்து பின்  சில கருது வேறுபாடுகள் காரணமாக 2007ல் விவாகரத்து செய்தார்.

அதன்பிறகு, மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் சுபோத் மஸ்காராவை கடந்த 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் விகான் என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் நந்திதா  தாஸ்க்கும், அவருடைய கணவர் சுபோத் மஸ்காராவுக்கும் இடையே சில  கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால்  . இருவரும் விவாகரத்து செய்ய முடிவு   செய்து நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ