’படம் தயாரிக்கக் கொடுத்த பணத்தில் அமெரிக்காவை சுற்றிப்பார்த்தார் இயக்குநர் நவீன்’...விசாகனின் மாமனார் பகீர்...

Published : Apr 30, 2019, 10:47 AM IST
’படம் தயாரிக்கக் கொடுத்த பணத்தில் அமெரிக்காவை சுற்றிப்பார்த்தார் இயக்குநர் நவீன்’...விசாகனின் மாமனார் பகீர்...

சுருக்கம்

ரஜினியின் இளைய மருமகனும் அவரது மாமனாரும் என்னை மிரட்டுகிறார்கள் என்று ‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் நேற்று நீண்ட கடிதம் எழுதி அதை ஊடகங்களுக்கு அன்ப்பியிருந்த நிலையில் அவரது குற்றச்சாட்டை மறுத்து தன் பங்குக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார் தயாரிப்பாளர் சேதுராமன்.


ரஜினியின் இளைய மருமகனும் அவரது மாமனாரும் என்னை மிரட்டுகிறார்கள் என்று ‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் நேற்று நீண்ட கடிதம் எழுதி அதை ஊடகங்களுக்கு அன்ப்பியிருந்த நிலையில் அவரது குற்றச்சாட்டை மறுத்து தன் பங்குக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார் தயாரிப்பாளர் சேதுராமன்.

பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

நான் சொர்ணா சேதுராமன் தயாரிப்பாளர் எனது flash Films என்னும் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் எனது மருமகன் விஷாகனை வைத்து படம் எடுக்க திட்டமிட்டேன் அப்போது “மூடர்கூடம்“ நவீன் என்பவர் எனது உறவினர் ராகுலன் மூலமாக என்னை அணுகினார்.படம் இயக்கி தருவதாக சொல்லி கதையின் பவுண்ட் ஸ்கிர்ப்ட் தருகிறேன் என்று என்னிடம் ரூ.45லட்சம் செக்காகவும், 5 லட்சம் பணமாகவும் பெற்றுக்கொண்டார். இதற்கு முறையாக 23.08.2016 அன்று ஒப்பந்தம்போட்டு அதன் படி நடந்து கொள்வதாக கூறினார்.

ஆனால் ஒப்பந்தத்தின் படி எந்த வகையிலும் நடக்காமல் அமெரிக்கா சென்றுவிட்டார்.சுமார் 10 மதங்கள் கடந்தும் பவுண்ட் ஸ்கிரிப்ட் எழுதி வரவில்லை. ஆனால் படத்தை முடித்து கொடுப்பதாக கூறினார். அவரது அனைத்து செலவுகளும் எனது தயாரிப்பு அலுவலகம் மூலமாகவே செய்யப்பட்டது.நான் இதன் பிறகு 27.04.2017 ல் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையா புகார்
கொடுத்தேன்.

அப்போது பல முறை அழைத்தும் நவீன் வரவில்லை. கடைசியாக ஒருநாள் வந்து விரைவில் பணத்தை திருப்பி தருவதாக கூறிவிட்டு அதன் பிறகு தொடர்பு கொள்ளவில்லை. நவீன் மூடர்கூடம் என்னும் ஒருபடம் மட்டும் தான் எடுத்துள்ளார்.மற்றபடி ஏற்கனவே கொளஞ்சி என்ற படம் எடுத்து 2 வருடங்களாகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை அந்த தயாரிப்பாளரையும் ஏமாற்றியுள்ளதாக கேள்விப்பட்டேன்.

நான் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட பட விஷயமாக கோர்டில் தடை உத்தரவு பெற்றுள்ளேன். சட்டப்படி கோர்டில் சந்திப்பதை விட்டுவிட்டு அறிக்கை கொடுத்து ஊடகத்தின் மூலமாக இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி திசை திருப்பி இதிலிருந்து விடுபட திட்டமிடுகிறார்.ஏற்கனவே பல புகார்கள் அவர்மேல் இருப்பதாக அறிகிறேன். என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு லொகேஷன் பார்க்க போனதாக கதை சொல்லி ஏமாற்றுகிறார்.

நான் சட்டபூர்வமாகதான் செயல்படுகிறேன். அதை அவரும் சட்டபூர்வமாக சந்திப்பதை விட்டுவிட்டு பணம் கொடுக்காமல் இருப்பதற்காக இது போன்ற போலியான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு நான் ஏமாற்றுவதாக கூறுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?