
தொடர்ந்து ஒன்றிரண்டு நாட்களாக உணவு ஒவ்வாமையால் வந்தி எடுத்துக்கொண்டிருந்த நடிகை த்ரிஷா ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதையொட்டி கிளப்பப்படும் வதந்திகளால் த்ரிஷாவின் தாயார் கோபமடைந்துள்ளார்.
நடிகை திரிஷா தற்போது எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குநர் சரவணன் இயக்கும் ’ராங்கி’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இயக்குனர் சரவணன் பிறந்தநாள் கொண்டாட்டம் கூட படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது. இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் சரவணனுக்கு நடிகை திரிஷா தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தார்.
சரவணனுக்கு திரையுலகில் ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டதால் ’ராங்கி’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. கதையின் நாயகி என்பதால் திரிஷாவும் இரவு பகலாக இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகை திரிஷா திடீரென மயங்கி விழுந்ததாக பரபரப்புத் தகவல் வெளியானது. மயங்கி விழுவதற்கு முன்னதாக நடிகை திரிஷா வாந்தி எடுத்ததாகவும் படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
இவ்வளவு போதாதா? த்ரிஷா வாந்தி எடுத்த சம்பவத்துக்கு கண்,காது, மூக்கு வைத்து சிலர் வதந்தி பரப்ப ஆரம்பித்தனர்.ஆனால் இந்த தகவல்களை எல்லாம் திரிஷாவின் தாயார் உமா மறுத்துள்ளார். தனது மகள் ’ராங்கி’ திரைப்படத்தில் இரவு பகலாக நடித்து வருவதாகவும் அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் உமா கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.