ராடான் டி.வி மேலாளரின் சட்டையை கிழித்த "வாணி ராணி" நடிகை: குடியிருப்பில் ஏற்பட்ட கைகலப்பில் பரபரப்பு!

 
Published : Apr 28, 2017, 03:20 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
ராடான் டி.வி மேலாளரின் சட்டையை கிழித்த "வாணி ராணி" நடிகை: குடியிருப்பில் ஏற்பட்ட கைகலப்பில் பரபரப்பு!

சுருக்கம்

Viral video on social media Radan media network employee fighting near office

நடிகை ராதிகா சரத்குமாரின், ராடான் டி.வி.மேலாளர் சுகுமாரனுக்கும், நடிகை சபீதா ராய்க்கும் ஏற்பட்ட தகராறில் அவரது சட்டை கிழிந்தது.

ராடான் டிவி மேலாளர் சுகுமாரன், சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஊருக்கு சென்றுள்ளதால், வாணி ராணி தொடரில் நடித்து வரும் நடிகை சபீதா ராயுடன், அவர் இரண்டு நாட்கள் தமது வீட்டிலேயே தங்கி பொழுதை கழித்துள்ளார்.

இறுதியில், அவருக்கும், நடிகை சபீதா ராய்க்கும் இடையே, அங்கு  தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் வாய்க்கு வந்தபடி, திட்டிக்கொள்ள , ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாறி உள்ளது.

அப்போது, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அதனால், சுகுமாரனின் சட்டை கிழிந்தது. இதனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பெரும்  பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, அங்கு விரைந்து வந்த வளசரவாக்கம் போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதற்குள், இந்த வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பரபரப்பை மேலும் கூட்டி உள்ளது. அத்துடன் இந்த காட்சிகள்  சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகின்றன. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!