வாவ்.. Hrithik Roshan-ன் மாஸ் லுக்..விஜய் சேதுபதிக்கு பதில் இவரா? .. எந்த படத்தின் ஹிந்தி ரீமேக் தெரியுமா..

Published : Jan 10, 2022, 01:05 PM ISTUpdated : Jan 10, 2022, 01:09 PM IST
வாவ்.. Hrithik Roshan-ன் மாஸ் லுக்..விஜய் சேதுபதிக்கு பதில் இவரா? .. எந்த படத்தின் ஹிந்தி ரீமேக் தெரியுமா..

சுருக்கம்

ஹிருத்திக் ரோஷனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று விக்ரம் வேதா ரீமேக்கில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஹிருத்திக் ரோஷன் உடல் முழுதும் ரத்தம் தெறித்தபடி மாஸ் லுக்கில் உள்ளார்.   

கடத்த 2017-ல் மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் விக்ரம்-வேதா. புஷ்கர்- காயத்ரி இயக்கத்தில் உருவாக்கி இருந்த இந்த படத்தின் ஹிந்தி ரிமேக் தற்போது உருவாகி  வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப்அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அபுதாபியில்  முதல் படப்பிடிப்பை முடித்துள்ள விக்ரம்-வேதா படக்குழு தற்போது இந்தியாவின் லக்னோவில் இரண்டாவது படப்பிடிப்பைத் தொடங்கியது. இந்தி ரீமேக்கும் எழுத்தாளர் புஷ்கர் மற்றும் காயத்ரியின் மேற்பார்வையிலேயே உருவாக்கி வருகிறது. இந்திய நாட்டுப்புறக் கதையான “விக்ரம் அவுர் பேட்டால்” அடிப்படையிலான நியோ-நோயர் ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தத் திரைப்படம், ஒரு கடினமான போலீஸ் அதிகாரியின் கதையைச் சொல்கிறது.

இப்படத்தை டி-சீரிஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃப்ரைடே ஃபிலிம்வொர்க்ஸ் மற்றும் ஒய்என்ஓடி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இது செப்டம்பர் 30, 2022 அன்று உலகளவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதில் விஜய்சேதுபதி நடித்த வேதா ரோலில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான்மாதவன் நடித்த விக்ரம் ரோலில் நடிக்கின்றனர்.  இந்நிலையில் ஹிருத்திக் ரோஷனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று விக்ரம் வேதா ரீமேக்கில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஹிருத்திக் ரோஷன் உடல் முழுதும் ரத்தம் தெறித்தபடி மாஸ் லுக்கில் உள்ளார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Vijayakanth : கேப்டனின் நன்றிக்கடன்... விஜயகாந்த் ஒரு ரூபா கூட சம்பளம் வாங்காமல் நடித்த படம் பற்றி தெரியுமா?
ரஜினியுடன் மோதும் அஜித்; ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா சூர்யா? அடுத்த 4 மாதத்தில் இத்தனை பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆகுதா?