Vikram Vedha 2 : ஹிந்தியில் ரீமேக் ஆகும்மாதவன் -விஜய் சேதுபதி மாஸ் மூவி ; லக்னோவில் துவங்கிய படப்பிடிப்பு

Kanmani P   | Asianet News
Published : Dec 06, 2021, 12:25 PM IST
Vikram Vedha 2 : ஹிந்தியில் ரீமேக் ஆகும்மாதவன் -விஜய் சேதுபதி மாஸ் மூவி ;   லக்னோவில் துவங்கிய படப்பிடிப்பு

சுருக்கம்

Vikram Vedha 2 : அபுதாபியில்  முதல் படப்பிடிப்பை முடித்துள்ள விக்ரம்-வேதா படக்குழு தற்போது இந்தியாவின் லக்னோவில் இரண்டாவது படப்பிடிப்பைத் தொடங்கியது.

கடத்த 2017-ல் மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் விக்ரம்-வேதா. புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் உருவாக்கி இருந்த இந்த படத்தின் ஹிந்தி ரிமேக் தற்போது உருவாகி  வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அபுதாபியில்  முதல் படப்பிடிப்பை முடித்துள்ள விக்ரம்-வேதா படக்குழு தற்போது இந்தியாவின் லக்னோவில் இரண்டாவது படப்பிடிப்பைத் தொடங்கியது.

இந்தி ரீமேக்கும் எழுத்தாளர் புஷ்கர் மற்றும் காயத்ரியின் மேற்பார்வையிலேயே உருவாக்கி வருகிறது. இந்திய நாட்டுப்புறக் கதையான “விக்ரம் அவுர் பேட்டால்” அடிப்படையிலான நியோ-நோயர் ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தத் திரைப்படம், ஒரு கடினமான போலீஸ் அதிகாரியின் கதையைச் சொல்கிறது.

இப்படத்தை டி-சீரிஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃப்ரைடே ஃபிலிம்வொர்க்ஸ் மற்றும் ஒய்என்ஓடி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இது செப்டம்பர் 30, 2022 அன்று உலகளவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய புஷ்கர் - காயத்ரி: “இரண்டு பெரிய நடிகர்களான ஹிருத்திக் மற்றும் சைஃப் உடன் பணிபுரிவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களைச் சுற்றி ஒரு சிறந்த குழு இருப்பதால், தீவிரமான மற்றும் உற்சாகமான ஒரு படத்தை வழங்குவோம் என்று நம்புகிறோம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!