
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், சியான் விக்ரமை வைத்து இயக்கியுள்ள ஆக்ஷன் திரில்லர் படமான 'துருவ நட்சத்திரம்' 7 வருடங்களுக்கு முன்பே படப்பிடிப்பு பணிகள் துவங்கப்பட்டு, பாதியில் நிதி நெருக்கடி பிரச்சனை காரணமாக, கிடப்பில் போடப்பட்ட நிலையில்... பின்னர் மீண்டும் தூசு தட்டப்பட்டு, சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்தது.
இதை தொடர்ந்து கடைசி நேரத்தில், ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் கெளதம் மேனன் வாங்கிய ரூ. 2 கோடியை கொடுக்காமல் இப்படத்தை வெளியிட கூடாது என, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதி மன்றம், நிபந்தனையுடன் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவு படி குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை கொடுக்க முடியாததால், இப்படம் நவம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியானது.
Lokesh Kanagaraj: 5 படம் இயக்கிவிட்டேன்.. அதிரடியாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்..!
படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்... தற்போது வரை இப்படத்தின் புரோமோஷன் பணிகள் எதுவும் துவங்கவில்லை. மேலும் பிரச்னையும் நீடித்து வரும் நிலையில், இப்படத்தை டிசம்பர் 8-ஆம் தேதி வெளியிட, படக்குழு முடிவு செய்துள்ளதாக... தற்போது புதிய ரிலீஸ் தேதி ஒன்று சமூக வலைத்தளத்தில் வலம்வந்து கொண்டிருக்கிறது. ஆனால் படக்குழு இன்னும் இதனை உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.