'கங்குவா' படப்பிடிப்பில் காயம் அடைந்த நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகாவுடன் ஏர்போட்டில் நடந்து செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். ஃபேண்டஸி கதையம்சத்துடன் உருவாகும் இந்த படத்தின், படப்பிடிப்பு... மிகவும் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் சூர்யா 6 கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பாபி தியோல், கோவை சரளா, யோகி பாபு, ஜெகபதி பாபு, ரெடிங் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Suriya: டாகடர் அறிவுரையால் தடைபட்ட கங்குவா ஷூட்டிங்.! முடியாத நிலையில்... புறப்பட்டார் சூர்யா!
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள பிவிஆர் ஃபிலிம் சிட்டியில், பரபரப்பாக நடந்து வந்தது. இதில் நடிகர் சூர்யா, சண்டை போடும் காட்சியை பிரத்தியேக செட் அமைத்து பட குழுவினர் படமாக்கி வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர், சண்டை காட்சியில் நடிகர் சூர்யா நடித்துவந்த போது ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் சூர்யாவின் தோள்பட்டையில் பலமாக அடிபட்டது. இதனால் உடனடியாக படபிடிப்பு நிறுத்தப்பட்டதுடன் சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முடிவுக்கு வந்த விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடர்! கிளிமேஸ் ஷூட்டிங்கில் இருந்து வெளியான புகைப்படம்!
தோள்பட்டையில் வீக்கம் மற்றும் காயம் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் தன்னுடைய நலன் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்கு... அறிக்கை மூலம் நலமாக இருப்பதை தெரிவித்தார் நடிகர் சூர்யா. விபத்தில் சிக்கியதால் இருந்து, சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டில் ஓய்வெடுத்து வந்த சூர்யா, மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டார். அவர் விமான நிலையத்தில்... சரியாக நடக்க முடியாமல் நடந்து செல்லும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.