முதல் படத்திலேயே விஜய்க்கு இணையாக நடித்துள்ள விக்ரம் மகன் துருவ்...! 'வர்மா' டீஸரே வேற லெவல்!

Published : Sep 23, 2018, 12:09 PM IST
முதல் படத்திலேயே விஜய்க்கு இணையாக நடித்துள்ள விக்ரம் மகன் துருவ்...! 'வர்மா' டீஸரே வேற லெவல்!

சுருக்கம்

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.

வர்மா:

படப்பிடிப்பு:

ஏற்கனவே படத்தின் கதாநாயகன் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேபால், சென்னை உள்ளிட்ட இடங்களில்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

எதிர்ப்பார்ப்பு:

முதல் முறையாக,  விக்ரம் மகன் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதால், ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. மேலும் இந்த படத்தில், தன்னுடைய மாஸ் நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட, விஜய் தேவகொண்டாவுக்கு இணையாக இவர் நடிப்பாரா என பலர்  தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர். 

நாயகி:

இந்த திரைப்படம் பாதி நிறைவு பெற்ற நிலையில், படத்தின் நாயகிக்காக பாலா படக்குழுவினர் கடும் தேடுதல் வேட்டை நடத்தினர். கௌதமின் மகள் சுப்புலட்சுமி, ஜான்வி கபூர் உள்ளிட்ட பல பலரது பெயர் அடிப்பட்டு வந்த நிலையில் , துருவ் ஜோடியாக வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி ஒருவழியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

டீசர்:

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துருவ் நடித்துள்ள 'வர்மா' பட டீசரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்த படத்தின் டீசர் இதோ:

PREV
click me!

Recommended Stories

கேசரி தான்... கேசரியே தான்..! ஜனநாயகன் ட்ரெய்லரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா?
திரும்பிப் போற ஐடியாவே இல்ல... I am Coming - அரசியல் டயலாக்குகள் உடன் அனல்பறக்கும் ஜனநாயகன் ட்ரெய்லர்..!