மாயமாகும் செல்போன்கள்! சீறி வரும் கழுகு! காப்பாற்ற வரும் சிட்டி! எப்படி இருக்கு டீசர்?

By manimegalai a  |  First Published Sep 13, 2018, 11:32 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலக சினிமாக்களை தமிழ் சினிமாவின் பக்கம் திருப்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றும் கூறலாம்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலக சினிமாக்களை தமிழ் சினிமாவின் பக்கம் திருப்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றும் கூறலாம். இந்த படத்தை வெற்றியை தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் பலர் இந்த படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க வேண்டும் என இயக்குனர் ஷங்கருக்கு வேண்டுகோள் வைத்தால், அவரும் இந்த படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 

Latest Videos

undefined

அதன்படி இந்த படத்தின் இரண்டாவது பாகம் 2.ஒ என்ற பெயரில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும், அதிக படியான கிராபிக் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெறுவதால், படத்தின் ரீலீஸ் தாமதமாவதாக இயக்குனர் ஷங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். 

இந்நிலையில் மிகுந்த எதிர்ப்பார்புகளுக்கு இடையே, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சரியாக காலை 9 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியானது.  முதல் முறையாக 3டி தொழில்நுட்பத்தில்  வெளியிட உலகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 3டியில் வெளியாகும் அதே நேரத்தில் யூடியூப் மற்றும் 2டியிலும் வெளியாகியுள்ளது.

டீசர் விமர்சனம்:

டீசரின் ஆரம்பமே பறவைகள் பறப்பது தான் காட்டப்படுகிறது. இதை தொடர்ந்து ஒரு செல் போன் டவரை கழுகுகள் சுற்றுகிறது. அந்த செல் போன் டவர் நடுவே ஒரு மனிதர் நிற்பது தெரிகிறது. அவர் அணிதிருந்த கண் கண்ணாடி கீழே விழுகிறது. இதில் இருந்து பறவை செல் போன் டவர் வைத்து இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெரிகிறது.

பறக்கும் செல் போன்கள்:

அடுத்ததாக வரும் காட்சியில்... காரில் போன் பேசிக்கொண்டு வரும் நபரின்... செல் போன் அவர் கையில் இருந்து தானாக பறக்கிறது. செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் போது கையில் இருக்கும் இருக்கும் பேசிக்கொண்டிருக்கும் போது என  மற்றும் கடைகளில் விற்கப்படும் போன்கள் மயமாகிறது. மக்கள் பீதியில் உள்ளதாக செய்திகளும் ஒளிப்பரப்பாகிறது. இந்த காட்சிகள் என்ன நடக்கிறது என பார்க்கும் ரசிகர்களையே ஒரு நிமிடம் பிரமிக்க வைக்கிறது.

ஏன் செல்போன்கள் மாயமாகிறது. என அனைவருக்குமே ஒரு கேள்வி எழுகிறது. இந்த காட்சியை அடுத்து அதற்கான விடை தெரியவருகியது. 2.0 படத்தில் நடித்திருக்கும் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தூங்கிக்கொண்டு இருக்கும் போது திடீர் என எழுகிறார். அவருடைய அறையை சுற்றி செல்போன்கள் நிரம்பியுள்ளது. அங்கு இருக்கும் செல்போன்கள் அவரை சுழல்கிறது. ஆனால் ஏன் இவரை சுற்றி செல்போன்கள் சுழல்கிறது... அக்ஷய் குமாருக்கும் இவருக்கும் என்ன சமந்தம் என்பது ட்விஸ்.

ரஜினியை மிரட்டும் அக்ஷய்:

செல்போன்களை சுழல வைத்து ரஜினியையே மிரட்டியுள்ளார் அக்ஷய் குமார். அதே போல் ரஜினியிடம் மட்டும் தன்னுடைய முகத்தை அக்ஷய் காட்டும் காட்சிகளும் உள்ளது. 

எதிர்க்கும் ரஜினி:

மக்களுக்கு  எதிராக, அறிவியலுக்கு அப்பால் பட்டு செயல் படும் சக்தியை கட்டுப் டுத்த ஒரு கான்பிரன்ஸ் போடப்படுகிறது. அப்போது தான் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும், சிட்டி யை கொண்டு வர முடிவு செய்யப்படுகிறது. அதன் படி மீண்டும் டிஸ்மேண்டில் செய்யப்பட்ட ரோபோவுக்கு உயிர் கொடுக்கப்படுகிறது. 

பறந்து வரும் சிட்டி:

ரோபோ மக்களை காப்பாற்ற பறந்து வருகிறது. அதே போல் மக்களும், கீழே விழும் காட்சிகள் இடம்பெறுகிறது. ரோபோ அவர்களை காப்பற்ற கழுகாக மாறி தாக்கும் அக்ஷய் குமாருடன் சண்டை போடுகிறது. கழுகை கூண்டுக்குள் அடைக்கும் சிட்டி, மனிதர்கள் போல் ஓடி வரும் செல் போன்கள் என யூகிக்க முடியாத காட்சிகளை கண் முன் காட்டியுள்ளார் ஷங்கர்.

செல்போனுடன் சண்டை போடும் சிட்டு:

இந்த டீசரை வைத்து பார்க்கும் போது... அக்ஷய் குமார், செல்போனை தன்னுடைய ஆயுதமாக வைத்து செயல்படுகிறார்.  இவருக்கு இந்த அற்புத சக்தி எப்படி கிடைக்குறது ஏன் இவர் இப்படி மாறினார். ஏன் மக்களை பழிவாங்க துடிக்கிறார். இவரிடம் இருந்து ஒரு ரோபோ எப்படி மக்களை காப்பாற்ற போகிறது என்பதே மீதி கதையாக இருக்கலாம்.  

இந்த படத்தின் டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே அனைவராலும் பார்க்கப்பட்டு, இதற்கு முன்பு உள்ள சாதனைகளை முறியடிக்கும் என கூறப்படுகிறது. 
 

click me!