ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் விக்ரம்...! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Asianet News Tamil  
Published : Mar 17, 2018, 05:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் விக்ரம்...! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சுருக்கம்

vikram shocking getup

நடிகர் விக்ரம் வித்தியாசமான கதைகளை மட்டும் அல்ல... மாறுப்பட்ட கதாப்பாத்திரங்களிலும் தேர்வு செய்து நடித்து  அசத்தி வருபவர். அவர் தேர்வு செய்யும் படங்களுக்காக தன்னுடைய உடலையும் வருத்தி நடிப்பவர் என்பது அனைவரும் அறிந்தது தான். 

இப்படி அவர் உடலை வருத்தி நடித்த ஐ, சேது போன்ற படங்கள் அவருக்கும் மிகவும் முக்கிய படங்களாக அமைந்தது.

இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் 'சாமி 2' படத்திற்காக ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். 

இயக்குனர் ஹரி இயக்கும் இந்தப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பித்தது. இந்த பாடத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் கமிட் ஆன நடிகை திரிஷா ஒரு சில காரணத்தால் இந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாமி 2 ஆம் பாகத்திலும் விக்ரம் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இருப்பினும் இந்த திரைப்படம் சாமி படத்தின் தொடர்ச்சி கிடையாது என ஹரி ஏற்க்கனவே அறிவித்துள்ளார்.

தற்போது விக்ரம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில் இருப்பவர் விக்ரம் போலவே இருக்கிறார். அவரின் உருவத்தை பார்த்தால் சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கும்.

இன்றும் இளமையாக தெரியும் அவர் இந்த வீடியோவில் அதிக வயது ஆனது போல் இருக்கிறார் என்பது சிலரின் கருத்து. ஆனால் விக்ரம் இது யாரென்று தெரியவில்லை என கூறியிருக்கிறார். எனினும் இந்தப்படத்தில் வயதான தோற்றத்தில் நடிக்கும் விக்ரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் - விஜய் பேச்சு
மீச வச்ச குழந்தையாக மாறிய விஜய்... அப்பாவை பார்த்ததும் பாசத்தில் ஓடோடி வந்து கட்டிப்பிடித்த தளபதி - வீடியோ இதோ