நடிகையர் திலகம் சாவித்திரியாக நடித்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷின் உருமாறிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்திரி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் இந்தப் படம் தயாராகி வருகிறது.
இப்படத்தில், ஜெமினி கணேசன் கேரக்டரில் துல்கர்சல்மானும் பத்திரிகை நிருபராக நடிகை சமந்தாவும் நடித்துள்ளனர்.
நடிகர் பிரகாஷ் ராஜ், அனுஷ்கா, நாகசைதன்யா, மோகன்பாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சாவித்திரியாக யாராலும் நடிக்க முடியாது என்றும், அவரது வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை பலர் விமர்சனங்களை அள்ளி தெளித்தனர்.
ஆனால் கீர்த்தி சுரேஷ் படத்தை பார்த்துவிட்டு பிறகு அனைவரும் கருத்து சொல்லட்டும் என மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் சாவித்திரியாக மாறிய கீர்த்தி சுரேஷின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரோடு ஜெமினிகணேசன் உருவத்தில் துல்கர் சல்மானும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.