ரகசிய திருமணம் செய்துக்கொண்ட நடிகை ஸ்ரேயா...!

Asianet News Tamil  
Published : Mar 17, 2018, 03:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
ரகசிய திருமணம் செய்துக்கொண்ட நடிகை ஸ்ரேயா...!

சுருக்கம்

actress shreya marriage issue

'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர்.

தமிழில் கலக்கிய ஸ்ரேயா:

மற்ற மொழி படங்களை விட ஸ்ரேயா தமிழ் படங்களில்  நடிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். இவருக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பு இருந்ததால் தமிழ்  சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விக்ரம், விஜய் என பலருடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்:

35 வயதை கடந்த இவர் தற்போது பட வாய்புகள் குறைந்து விட்டதால் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டார். 

இவர் ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர்களுடைய திருணம் குடும்ப முறைப்படி மார்ச் 17, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த தகவலை ஸ்ரேயா மறுத்திருந்தார். 

இந்நிலையில் மும்பையில் உள்ள ஸ்ரேயா வீட்டில் கடந்த 12 ஆம் தேதியே ஸ்ரேயாவுக்கும் அவருடைய காதருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும். இந்த திருமணத்தில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டதாகவும். பிரபலங்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரெக்கார்டு மேக்கராக மாறிய தளபதி... சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்..!
ஜனநாயகனை உள்ள புகுந்து அடிச்சிடலாம்னு நினைக்குறவங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்... எச்.வினோத் தடாலடி பேச்சு