
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்துக்காகப் பல்வேறு நாடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம் இது 'கேட்ச் மீ இஃப் யு கேன்', உலகம் சுற்று வாலிபம் மாதிரி செம கிளாஸ் மூவியாக இருக்குமாம்.
அயன், மாற்றான் திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா, கே.வி.ஆனந்த் இணைந்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படம் குறித்து கே.வி.ஆனந்த் பிஹைண்ட்வுட்ஸ் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “உலகம் முழுவதும் 10 வெவ்வேறு இடங்களில் படம் பிடிக்கத் திட்டமிட்டுள்ளோம். நியூயார்க், பிரேசில், புது டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பிற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறும். சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லராக இந்த படம் இருக்குமாம்.
மேலும் பேசிய அவர், இந்த படத்தின் கதையின் முக்கிய காட்சிகள் டெல்லியில் படமாக்கப்படும். படப்பிடிப்பு தேதி இன்னும் முடிவாகவில்லை. சூர்யா தற்போது நடித்துவரும் “என்ஜேகே” படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த பின்பே படப்பிடிப்பைத் தொடங்குவோம்” என கூறியுள்ளார். இப்படம் அயன், 'கேட்ச் மீ இஃப் யு கேன்', உலகம் சுற்றும் வாலிபன் வேகம், விறுவிறுப்பு, சுவாரஸ்யம் என கலக்கலான த்ரில்லிங்காக இருக்குமாம்.
படத்தொகுப்பாளராக ஆண்டனி பணியாற்றவிருப்பதை கே.வி.ஆனந்த் உறுதிப்படுத்தியுள்ளார். அயன், மாற்றான் படத்திற்கு திரைக்கதை அமைத்ததில் சுபா மேற்கொண்டிருந்தார் ஆனால் இந்த படத்திற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதையில் பணிபுரிகிறார். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் படப்பிடிப்பைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.