
நடிகர் சிவகுமார் விவகாரத்தை தொடர்ந்து செஃல்பி எடுக்க முயன்ற இளைஞரை நடிகர் விக்ரம் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சில மாதங்களுக்கு முன் மதுரையில் நடந்த ஸ்கேன் திறப்பு விழாவுற்கு சென்ற நடிகர் சிவகுமார் செல்பி எடுக்க வந்த நபரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் வைரலானது. அப்போது அந்த இளைஞரில் செல்போன் உடைந்தது. பிறகு புதிய செல்போனை அந்த இளைஞருக்கு வாங்கிக் கொடுத்தார் சிவகுமார். இவரா இப்படி நடந்து கொண்டார்..? என சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியாகினர்.
அதேபோன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த சில தினக்களுக்கு முன் உடற்பயிச்சி கூட திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார் விக்ரம். அப்போது ரசிகர் ஒருவர் விக்ரமுடன் செல்பி எடுக்க முயன்றபோது அவரை தடுத்து செல்பி எடுக்க மறுத்துவிட்டார் விக்ரம். இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த விடியோவை கண்ட அனைவரும் நடிகர் விக்ரமா இப்படி நடந்து கொண்டார் என்று ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.
ஆனால், உண்மையில் நடிகர் விக்ரம் அப்படிபட்ட ஆள் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விழா ஒன்றில் பங்கேற்ற விக்ரமிடம் செல்பி எடுக்க வந்த ஒரு நபரை காவலர்கள் தடுத்த போது விக்ரமே அந்த நபரை அழைத்து செல்பி எடுத்துக்கொண்டார் என்பதையும் நினைவூட்டுகிறார்கள் திரைத்துறையினர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.