வீம்புக்கு ரிலீஸ் பண்ணி மார்க்கெட்டை இழந்த ரஜினி! பேட்டயை வெச்சு செஞ்ச தெலுங்கு ஹீரோக்கள்...

Published : Jan 21, 2019, 02:00 PM ISTUpdated : Jan 21, 2019, 02:05 PM IST
வீம்புக்கு ரிலீஸ் பண்ணி மார்க்கெட்டை இழந்த ரஜினி! பேட்டயை வெச்சு செஞ்ச தெலுங்கு ஹீரோக்கள்...

சுருக்கம்

பொங்கலுக்கு படத்தை வெளியிட்ட தீருவேன் என அடம்பிடித்து அஜித்தோடு மோதி மூக்கை உடைத்துக் கொண்டது பத்தாமல், அதே வெறியோடு ஆந்திராவில் பேட்ட படத்தை ரிலீஸ் செய்து பலத்த அடிக்கு அவர்களே காரணமாகியுள்ளார். 

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருந்த படம் பேட்ட படம் கடந்த ஜனவரி 10ம் தேதி உலகம் முழுவதும்  வெளியானது. உலகம் முழுவதுமே படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தது. ஆனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் மரண அடி வாங்கியுள்ளது. 

பேட்ட படம் தெலுங்கு தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நல்ல வசூல்  அள்ளியுள்ளது, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரிய அளவில் தியேட்டர் கிடைக்காததால் வசூலில் பின்னடைவை சந்தித்துள்ளது.

இதனால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள், எங்க தலைவரை தேவையில்லாமல் ஜுனியர் நடிகரான அஜித்துடன் மோதவிட்டு அசிங்கப்படுத்தினீர்கள், அதேபோல தெலுங்கில் மாஸ் ஹீரோக்கள் பாலகிருஷ்ணா நடித்துள்ள என்டிஆர் படம், ராம்சரண் நடித்துள்ள 'வினய விதேய ராமா’, வெங்கடேஷ், வருண் தேஜ் நடித்துள்ள 'எப் 2' போன்ற வர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நேரத்தில் பேட்டயை ரிலீஸ் பண்ணி இப்படி தெலுங்கு மார்க்கெட்டையும் படுகுழியில் தள்ளிட்டு வேடிக்கை பார்க்கிறீங்க, மொத்த அவமானத்தையும் எங்கள் தலைவர்க்கு தான் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

உஷாரான விஸ்வாசம் தங்களது ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டது. ஆனால்  பேட்ட டீம் வீம்புக்கென்றே  ரிலீஸ் பண்ணது. அதேநாளில்  3 நேரடி படங்கள் ரிலீஸ் ஆனதால் தியேட்டர் கிடைப்பதில் கடும் சிக்கல்  வரும் படத்தை பிறகு ரிலீஸ் செய்யுங்கள் என விநியோகிஸ்தர்கள்  சொல்லியும் செய்தது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளதாம்.

ரஜினிகாந்த் நடித்து தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படும் படங்கள் ஆந்திராவில் தமிழகத்துக்கு இணையாக வசூல் குவிப்பது கடந்த பல வருடங்களாக நிகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான '2.0' படம் தமிழகத்தை காட்டிலும் தெலுங்கில் தான் அதிக வசூலைப் பெற்றது. பொங்கலுக்கு வெளியாக உள்ள பேட்ட படத்தை ஆந்திராவில் திரையிட்டு அதிக வசூலைப் பெறலாம் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பேட்ட டீம் கனவை களைத்து திருப்பி அனுப்பியது  தெலுங்கு மாஸ் ஹீரோக்கள் படம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்