விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியீடு!

Published : Nov 29, 2025, 09:36 PM IST
Vikram Prabhu Sirai Movie Mannichiru Lyric Video Released

சுருக்கம்

Vikram Prabhu Sirai Movie Mannichiru Lyric Video Released : விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் சிறை படத்தில் இடம் பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் மன்னிச்சிரு என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்திற்காக போராடிக் கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம் பிரபு. இன்றைய இளம் நடிகர்கள் வரிசையில் இடம் பெற்று கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி நடித்து வருகிறார். ஆனால், எந்தப் படமும் பெரியளவில் ஹிட் கொடுக்கவில்லை. இவரது நடிப்பில் வந்த கும்கி படம் மட்டுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதுவும் இது அவரது அறிமுக படம். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான படம்.

அதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான ஒரு சில படங்களை தவிர வேறு எந்தப் படமும் பெரியளவில் ஹிட் கொடுக்கவில்லை. தற்போது சிறை என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 25ஆவது படம். இயக்குநர் வெற்றிமாறனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இவரது இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் எஸ் எஸ் லலித் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, அனிஷ்மா அணில்குமார், ஆனந்தா மற்றும் எல் கே அக்‌ஷய் குமார் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கும், போலீஸ் அதிகாரிகும் இடையில் நடக்கும் சம்பவம் தான் இந்தப் படம். இந்தப் படத்தில் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் பாடலான மன்னிச்சிரு என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கான சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

அடிபொலியாக இருந்ததா குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்...? முழு விமர்சனம் இதோ
துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது