'விக்ரம்' பட ஃபர்ஸ்ட் லுக்கை கமலின் சூப்பர் ஹிட் பட போஸ்டரோடு ஒப்பிட்ட ரசிகர்கள்! எந்த படம் தெரியுமா?

By manimegalai aFirst Published Jul 10, 2021, 6:29 PM IST
Highlights

நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தின் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியான நிலையில், இந்த படத்தின் போஸ்டரை நடிகர் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படத்தின் போஸ்டரோடு ரசிகர்கள் ஒப்பிட்டு வருகிறார்கள்.
 

நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தின் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியான நிலையில், இந்த படத்தின் போஸ்டரை நடிகர் கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படத்தின் போஸ்டரோடு ரசிகர்கள் ஒப்பிட்டு வருகிறார்கள்.

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏற்கனவே 'விக்ரம்' படத்தில் இருந்து வெறித்தனமாக வெளியான டீசர் ஒன்று வெளியாகி, இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது. அரசியலில் பிசியாக இருந்த கமல்ஹாசன், தன்னுடைய கட்சி... சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததால், அரசியல் வேலைகளை, கவனித்து கொண்டே... திரைப்படத்திலும் தன்னுடைய கவனத்தை செலுத்த தயாராகியுள்ளார்.

மேலும் தற்போது  கொரோனா இரண்டாவது அலை, கட்டுக்குள் வந்து விட்டதால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்திற்கான டெஸ்ட் ஷூட்டில் கடந்த வாரம் கலந்து கொண்டார். இவருடன் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் 'பாபநாசம் 2 ' படத்தில் கமல் நடிக்க உள்ளது குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இந்நிலையில் சற்று முன்னர் வெளியான 'விக்ரம் ' பட பிரஸ்ட் லுக்கில் நடிகர் விஜய் சேதுபதி, கமல்ஹாசன், ஃபகத் பாசில் ஆகியோர் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தின் போஸ்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் சில ரசிகர்கள்... 'விக்ரம்' படத்தின் போஸ்டர், கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படமான 'விருமாண்டி' படத்தின் போஸ்டரோடு ஒப்பிட்டு வருகிறார்கள். இந்த படத்தில் நெப்போலியன், கமல், பசுபதி ஆகிய மூத்த முகத்தை இணைத்தபடி போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Goosebumps😍😍😍🔥🔥🔥 pic.twitter.com/29tdVS5lqn

— Anbu Seivom ❤🤗 (@parasajoy)

- Kola massuu..! 🔥🔥 Reminded me of this poster.. the poster itself says it's gonna be out and out character driven film.!! 🔥 good to see & in the poster.!! Deadly..🔥 Therika vidu thala pic.twitter.com/UlX83ZbGwI

— Laxmi Kanth (@iammoviebuff007)

click me!