கமல்ஹாசனின் 'விக்ரம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published : Jul 10, 2021, 05:24 PM IST
கமல்ஹாசனின் 'விக்ரம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சுருக்கம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.  

'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். அரசியல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் அடுத்தடுத்த படங்களிலும் கமல் கவனம் செலுத்த துவங்கியுள்ளதால் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

மேலும் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்ததாக தகவல் வெளியானது. இதில் கமல்ஹாசன் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் நேற்று இரவு கூறி இருந்தார். இதனை அடுத்து கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் 'விக்ரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் படக்குழுவினர் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் 'விக்ரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் 'விக்ரம்' பட போஸ்டரை வெளியிட்டு, "வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம்  திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்… விக்ரம்" என பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், பகத் பாசில், நரேன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தில் இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!