தனுஷ் படம் குறித்து பரவிய வதந்திக்கு புகைப்படம் வெளியிட்டு முற்று புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்!

Published : Jul 10, 2021, 03:51 PM IST
தனுஷ் படம் குறித்து பரவிய வதந்திக்கு புகைப்படம் வெளியிட்டு முற்று புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்!

சுருக்கம்

நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வரும் 43 ஆவது படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் திடீர் என வெளியேறியதாக ஒரு தகவல் வெளியானதை தொடர்ந்து, இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை சத்யஜோதி பிலிம் வெளியிட்டுள்ளது.  

நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வரும் 43 ஆவது படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் திடீர் என வெளியேறியதாக ஒரு தகவல் வெளியானதை தொடர்ந்து, இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை சத்யஜோதி பிலிம் வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தன்னுடைய 43 ஆவது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வருகிறார். தனுஷ் ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்வதற்கு முன்பே இந்த படத்தின், முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்தியா வந்த ஓரிரு நாட்களிலேயே நடிக்க துவங்கி விட்டார்.

சமீபத்தில் கூட தனுஷின்  43 ஆவது படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘D43' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என்றும் இந்த படப்பிடிப்பு இறுதி கட்ட படப்பிடிப்பு ஆக இருக்கும் என்றும் தெரிவித்தது. அதன் படி தற்போது மீண்டும் தனுஷ் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாளவிகா மோகன் அங்கு சென்றார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன்.... திடீர் என தனுஷ் படத்தில் இருந்து விலகியதாகவும், எனவே இந்த படத்தை தனுஷ் திருடா திருடி பட இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவுடன் சேர்ந்து இயக்க உள்ளதாக  சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவ துவங்கியது.

இந்த தகவல் ஏற்கனவே வதந்தி என்பது வெளியாகியுள்ள நிலையில், இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது D43 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனுஷுடன் இயக்குனர் கார்த்திக் நரேன் மாஸ்க் அணிந்து கொண்டு டயலொக் டிஸ்கஸ் செய்வது போல் சத்யஜோதி பிலிம்ஸ் புகைப்படம் வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!
அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்