கமர்ஷியல் வேட்டையாட ஸ்கெட்ச் போடும் ‘சாமி 2’!

First Published Jun 2, 2017, 10:43 AM IST
Highlights
Vikaram next project is samy-2


இருமுகன் படத்தையடுத்து வாலு இயக்குனருடன் ‘ஸ்கெட்ச்’ கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ என ஸ்கெட்ச் போட்டு நடித்துவரும்  விக்ரம் அடுத்ததாக ஹரி இயக்கும் ‘சாமி 2’வில் நடிக்கப்போகிறார்.

'சிங்கம் 3' படத்தைத் தொடர்ந்து டைரக்டர் ஹரி தற்போது விக்ரமை கொண்டு இயக்கும் ‘சாமி 2’ படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். மேலும், இதற்கு முன்பு சூர்யாவை ‘வேல்’ படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க வைத்த ஹரி, ‘சாமி 2’விலும் விக்ரமை இரண்டு வேடங்களில் நடிக்க வைக்கிறார். 

அதன் காரணமாக, இந்தப் படத்துக்காக தனது பாடி லாங்குவேஜை மாற்றி ரிஸ்க் எடுத்து நடிக்கிறாராம் விக்ரம். அதோடு, சாமி படத்துக்குப் பிறகு வருடத்துக்கு இரண்டு படங்கள் கொடுத்து வந்த ஹரி, ‘சிங்கம் 3’ படத்திற்காக மட்டுமே மூன்று வருடங்கள் சூர்யாவுக்காகக் காத்திருந்தார். 

ஆனால், இனிமேல் அப்படி அவர் இடைவெளி கொடுக்கப் போவதில்லையாம். வருடத்துக்கு இரண்டு படம் கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம். அந்த வகையில், ஜூலை மாதம் இறுதியில் 'சாமி 2' படப்பிடிப்பைத் தொடங்குபவர் 2018 தொடக்கத்தில் அந்தப் படத்தை வெளியிடுகிறார்.

click me!