
தமிழ் திரைப்பட உலகில் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவருக்கு நிகராக வசூலில் சாதனை படைத்து வருவது, விஜய் மற்றும் அஜீத்தின் படங்கள் மட்டுமே.
சில நேரங்களில், ரஜினி படங்களை விட அதிக வசூலை குறைந்த நாட்களில் அள்ளித்தருவதும் இவ்விருவரின் படங்கள் மட்டுமே.
ஆனாலும், அஜீத் மற்றும் விஜய் படங்களுக்கு இடையில், வெற்றி மற்றும் வசூலில் போட்டி ஏற்பட்டு அது இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் சலசலப்பை உண்டாக்குவதும் வழக்கம்.
இந்நிலையில், அஜீத்தின் விவேகம், விஜயின் பைரவா படத்தை விட கூடுதலாக விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், அதை ஒரே நிறுவனத்திற்கு நேரடியாக விற்பதற்கு முடிவு செய்து பணிகளை தொடங்கியது. அதன்படி, 50 கோடி வரை கொடுத்து அந்த படத்தை வாங்குவதற்கு சில நிறுவனங்கள் தயாராக இருந்தன.
ஆனால், திடீரென, தமிழகம் முழுவதும் அதை தாமே நேரடியாக, ஏரியா வாரியாக பிரித்து விற்பனை செய்யலாம் என்று சத்யா ஜோதி நிறுவனம் தமது முடிவை மாற்றிக்கொண்டு, அந்த முயற்சியில் இறங்கி உள்ளது.
இதற்கு முன்பு விஜயின் பைரவா படம் 45 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனதாம். ஆனால், அஜீத்தின் விவேகம் 55 கோடிக்கு விற்பனை ஆனதில், சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறதாம்.
ஆனால், இது தவறான கருத்து என்றும். விஜய் படத்தை விட கூடுதல் தொகைக்கு விற்பனை ஆனதாக பொய் தகவல் பரப்புவதாகவும் சிலர் கூறுகின்றனர். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.