
பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி மலையாளம் மற்றும் தமிழில் கிட்ட தட்ட 50 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார், இவரது குரலில் உள்ள இனிமைக்கு தேனியை போல் பல ரசிகர்கள் உள்ளனர்.
பிறவியிலேயே கண் பார்வை குறைபாடுடன் பிறந்த விஜயலட்சுமிக்கு இசை மேல் ஆர்வம் உள்ளதை அறிந்த பெற்றோர், அவரை இசை பயில வைத்து இன்று மிக பெரிய பாடகியாய் உருவெடுக்க செய்துள்ளனர்.
மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட இவர் தமிழில் மிக தெளிவாகவும் அருமையாகவும் பாடக்கூடியவர். சமீபத்தில் இவருக்கு கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது பார்வை பெற்றுள்ளார்.
இந்த சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், சமீபத்தில் இவருக்கும் இசையமைப்பாளர் சந்தோஷுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடித்த நிலையில் அந்த திருமணம் நடைபெறாமல் நின்றுபோனது. காரணம் சந்தோஷ் வைக்கம் விஜயலட்சுமியை பாடுவதை விட்டு விட்டு இசை கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிய சொன்னதால், தனக்கு இசை தான் முக்கியம் திருமணம் அல்ல என்கிற முடிவை எடுத்தார் விஜயலட்சுமி.
இந்நிலையில் திருமணம் நிறுத்த பட்ட நிலையிலும் மனதில் சோகத்தை தாங்கிக்கொண்டு சாதனை செய்துள்ளார் விஜயலட்சுமி.
நேற்று கேரளாவில் இவரது சாதனை நிகழ்த்தப்பட்டது, 5 மணி நேரத்தில், 67 பாடல்களை ஒற்றை கம்பியை கொண்ட காயத்திரி வீணை மூலம் இசைத்து இந்த சாதனையை படைத்துள்ளார் .
இந்த சாதனை பல முன்னனி இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் மத்தியிலும் நிகழ்த்த பட்டுள்ளது. இதற்கு முன் 5 மணி நேரத்தில் 51 பாடல்கள் இசைத்து இவர் செய்தது தான் சாதனையாக இருந்தது தற்போது இவரது சாதனையை இவரே முறியடித்துள்ளார்.
வைக்கம் விஜயலட்சுமியின் சாதனைகள் மேலும் தொடர நியூஸ் பாஸ்டின் வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.