
விஜய் சேதுபதி இந்த ஆருடம் மட்டும் 6 வெற்றி படங்களை கொடுத்து தற்போது முன்னணி நடிகர் மட்டுமில்லாமல் திரை உலகை சேர்ந்த பலரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியவர். இவருக்கு பல திரையுலக ரசிகர்களும் உள்ளனர்.
தொடர்ந்து வெளிவரும் அவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புதுப்புது கதைகளாக தேர்ந்தெடுக்கும் இவர் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கவண் படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு நேற்று சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் நடந்ததாம். இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதாகவும் தகவல்கள் வந்தது.
இதனால் அப்பகுதியில் கூட்டம் கூடியதால் மக்கள் வெளியே கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கமுடியமல் அவதியுற்றதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.